ஒவவொருவருக்கும் காலை உணவு என்பது மிகவும் முக்கியமானது. அன்றைய தினம் முழுவதும் உடல் சுறுசுறுப்பாக இயங்குவதற்கு காலை உணவு ஒரு முக்கிய தேவையாக உள்ளது. இதனால் சத்தான ஊட்டச்சத்து அதிகம் உள்ள காலை உணவை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். எனவே இயற்கையில் அதிக சத்தானது எது என்பதை உணர்ந்து அந்த உணவுகளை தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும்.
அந்த வகையில் காலை உணவாக தயிர் மற்றும் வாழைப்பழத்தின் கலவையை எடுத்துக்கொள்வது ஆரோக்கியமானது மட்டுமல்லாமல் ஊட்டச்சத்து நிறைந்ததாகவும் உள்ளது. இதை தயாரிப்பதற்கு மிகக் குறைவான நேரம் போதுமானது என்று கூடுதல் பயன்.
வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம், வைட்டமின் சி, வைட்டமின் பி-6, மெக்னீசியம் மற்றும் இரும்புச்சத்து மற்றும் தயிரில் உள்ள அதிக புரதம், சோடியம் மற்றும் கால்சியம் ஆகியவை சரியான அளவு ஊட்டச்சத்துக்களுடன் நாளைத் தொடங்க உதவுவதால் இந்த உணவு பல அம்சங்களில் நன்மை பயக்கும்.
தயிர் மற்றும் வாழைப்பழத்தை உட்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் சில:
உடல் எடை நிர்வகிப்பு
வாழைப்பழம் மற்றும் தயிர் இரண்டிலும் நார்ச்சத்து மிக அதிகமாக உள்ளது. இவை உடல் கொழுப்பை வேகமாக எரிக்க உதவுகிறது. மேலும், காலை உணவாக இதை எடுத்துக்கொள்ளும்போது உடல் பசியில்லாமல் திருப்திகரமான இருக்கும்.எனவே காலை உணவாக இதை சாப்பிட்ட பிறகு உங்கள் உடல் சுறுசுறுப்பாக இருக்கும்.
எலும்புகளை வலுவாக்கும்
தயிரில் உள்ள நல்ல பாக்டீரியா மற்றும் வாழைப்பழத்தில் உள்ள நார்ச்சத்து உடலில் கால்சியம் உறிஞ்சுதலை மேம்படுத்துகிறது. இது வலுவான எலும்புகள் மற்றும் மூட்டு வலிகளுக்கு தீர்வு தர வழிவகுக்கிறது.
மன அழுத்தத்தை போக்குகிறது
வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம் தசைகளை தளர்த்த உதவுகிறது, அதே நேரத்தில் தயிரில் உள்ள சோடியம் தசை சுருக்கத்தை உருவாக்குகிறது. எனவே இவற்றின் கலவையானது அடிப்படை சமநிலைச் செயலைச் செய்கிறது. மேலும் ஊட்டச்சத்துக்களை உயிரணுக்களுக்குக் கொண்டு செல்ல உதவுகிறது.
கூடுதலாக, வாழைப்பழத்தில் உள்ள டிரிப்டோபான் உள்ளடக்கம் நரம்பியக்கடத்தி செரோடோனினாக மாற்றப்படுகிறது, இது உடலை ஓய்வெடுக்க உதவுகிறது. அதோடு உங்களின் மனநிலையை சீராக்குகிறது.
மலச்சிக்கலுக்கு தீர்வு
காலையில் எழுந்திருக்கும்போது நலல வயிற்றை விட சிறந்தது எதுவுமில்லை. வாழைப்பழத்தின் நார்ச்சத்து மற்றும் தயிர் நல்ல பாக்டீரியாக்கள் குடல் இயக்கத்திற்கு உதவுகின்றன, இது மலச்சிக்கலுடன் போராடுபவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தயிரில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் குடல் ஆரோக்கியத்தை பராமரிக்கவும் உதவுகிறது.
அதிக ஆற்றல்
இந்த கலவையில் கார்போஹைட்ரேட், பொட்டாசியம் மற்றும் வைட்டமின் பி6 ஆகியவை நிறைந்துள்ளன. ஊட்டச்சத்துக்கள் நிரம்பிய உணவு உங்களின் ஆற்றல் மட்டங்களை உடனடியாக உயர்த்தும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.