Advertisment

உடனடியாக சுகரை குறைக்கும் 5 உணவுகள்: இதை தெரிஞ்சு வச்சுக்கோங்க!

உடலில் நீரிழிவு நோயை உடனடியாக விரட்டும் அளவுக்கு எந்த உணவும் இல்லை. ஆனால் இரத்த சர்க்கரை அளவை உடனடியாக குறைக்கும் சில உணவுகள் உள்ளன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Who can get diabetes How to prevent Doctors explanation

நீரிழிவு நோய்

இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் சந்திக்கும் முக்கிய பிரச்சினை நீரிழிவு நோய். உடல் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சமநிலை தவறும்போது நீரிழிவு நோய் ஏற்படுகிறது. இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உணவு கட்டுப்பாடுகளை கடைபிடிக்கவேண்டியது அவசியம்

Advertisment

ஆனால் உடலில் நீரிழிவு நோயை உடனடியாக விரட்டும் அளவுக்கு எந்த உணவும் இல்லை. ஆனால் இரத்த சர்க்கரை அளவை உடனடியாக குறைக்கும் சில உணவுகள் உள்ளன. அந்த வகையில் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் சில உணவு பொருட்கள் :

முட்டை :

முட்டையில் உள்ள புரதம் மற்றும் கொழுப்பு உடலில சர்க்கரையின் அளவை வெகுவாக கட்டுப்படுத்தும். மேலும் உடலில் சர்க்கரையின் சமநிலையை நிர்வகிக்க உதவுகிறது. எனவே நீரிழிவு நோயாளிகள் தங்களது உணவில் தினமும் 2 முட்டைகளை சேர்க்க அறிவுறுத்தபப்டுகிறார்கள்.

கீரை. பச்சை காய்கறிகள்

காய்கறிகளில் அதிகளவு நார்ச்சத்து வைட்டமின்கள் மற்றும் மற்றும் தாதுக்கள் அதிகம் உள்ளன. இதனால் உயர் இரத்த சர்க்கரையை உடனடியாக குறைக்க இதை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

சிட்ரஸ் பழங்கள் :

ஆரஞ்சு மற்றும் திராட்சை போன்ற சிட்ரஸ் பழங்களை அதிகம் சாப்பிடும் போது இரத்த குளுக்கோஸ் அளவை உடனடியாக குறைக்க முடியும்.

அவகேடோ

இதில் பல ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளது. இதில் தாவர அடிப்படையிலான நார்ச்சத்து மற்றும் கொழுப்பு அடங்கியுள்ளதால், இரத்த சர்க்கரை அளவை குறிப்பிட்ட விகிதத்தில் இயல்பு நிலைக்கு கொண்டு வருகிறது.

புளித்த உணவுகள் :

புளித்த உணவுகளில் புரோபயாடிக்குகள் அதிகளவில் உள்ளதால். இது இரத்த குளுக்கோஸ் அளவை பராமரிக்க உதவுகிறது.  அதே நேரத்தில் இரத்த சர்க்கரை அளவையும் குறைக்கிறது. இதனால் நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவில் தயிர் மோர் போன்ற புளித்த பொருட்களை எடுத்துக்கொள்வது நல்லது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil  

Healthy Life
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment