Advertisment

வீட்டுல லெமன் இருக்கா? சுகர் குறைக்க இந்த 3 வழிகளில் யூஸ் பண்ணுங்க!

எலுமிச்சை நீண்ட காலமாக அமெரிக்க நீரிழிவு சங்கத்தால் நீரிழிவு நோய்க்கான சூப்பர்ஃபுட் என்று கருதப்படுகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
diabetes

Add lemon to your diet for reducing blood sugar

உங்களுக்கு நீரிழிவு நோயா? அடிக்கடி திடீரென வரும் சர்க்கரைக் கூர்மையைக் கட்டுப்படுத்த வழிகளை தேடுகிறீர்களா? அப்படியானால், சிட்ரஸ் பழத்தில் காணப்படும் ஏராளமான கரையக்கூடிய நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி ஆகியவற்றின் காரணமாக எளிய எலுமிச்சை உங்களுக்கு உதவும்.

Advertisment

எலுமிச்சை சாறு எவ்வாறு உச்ச இரத்த குளுக்கோஸைக் கணிசமாகக் குறைக்கும் மற்றும் அந்த உச்சத்தை 35 நிமிடங்களுக்கு மேல் தாமதப்படுத்துகிறது என்பதை சமீபத்திய ஆய்வு காட்டுகிறது. எலுமிச்சை நீண்ட காலமாக அமெரிக்க நீரிழிவு சங்கத்தால் நீரிழிவு நோய்க்கான சூப்பர்ஃபுட் என்று கருதப்படுகிறது.

இது குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் உணவாகும், உங்கள் உணவில் எலுமிச்சையை சரியான முறையில் சேர்த்துக் கொண்டால், வீக்கத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பதோடு, சாப்பிட்ட பிறகு இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கவும் இது உதவும்.

எலுமிச்சம் பழச்சாறு உங்கள் சீரற்ற இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் மற்றும் நீரிழிவு நோய்க்கு ஒரு சிறந்த மீட்பராக செயல்படக்கூடிய சக்திவாய்ந்த மருந்துகளில் ஒன்றாகும் என்கிறார் மருத்துவர் ஸ்மிதா போயர் பாட்டீல்.

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு எலுமிச்சை ஏன் சரியான உணவு

எலுமிச்சை வைட்டமின் சி, நார்ச்சத்து, அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகளின் வளமான மூலமாகும். அதன் குறைந்த கிளைசெமிக் குறியீடு இரத்த சர்க்கரை அளவை கணிசமாகக் குறைக்க உதவுகிறது. மேலும், எலுமிச்சையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் சிறந்த வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகின்றன.

எலுமிச்சைச் சாற்றில் கலோரிகளின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருப்பதால் நீரிழிவு நோயாளிகள் சாப்பிடுவதற்கு ஏற்றது. எலுமிச்சை சாற்றில் உள்ள வைட்டமின் சி இன்சுலின் அளவையும் கட்டுப்படுத்துகிறது எலுமிச்சையில் எளிதான நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன, அவை செரிமானத்திற்கு உதவுகின்றன, மேலும் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கின்றன," என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர்.

இரத்த சர்க்கரையை குறைக்க உங்கள் உணவில் எலுமிச்சை சாற்றை சேர்க்க 3  வழிகள் இங்கே உள்ளன

publive-image
எலுமிச்சம் பழச்சாறு உங்கள் சீரற்ற இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும்

1.உங்கள் உணவில் சில துளிகள் புதிய எலுமிச்சை சாற்றை பிழிவது உங்கள் உணவில் எலுமிச்சையை இணைப்பதற்கான சரியான வழியாகும். அரிசி முதல் கறி வரை பாஸ்தா என, எந்த உணவிலும் சில துளிகள் எலுமிச்சை சேர்க்கலாம். இது உணவுக்கு ஒரு நல்ல சுவையையும் நறுமணத்தையும் தருகிறது. உங்கள் சாலட்களை சுவையாக மாற்ற எலுமிச்சை சாறும் சேர்க்கலாம்.

2.வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் எலுமிச்சை சாறு குடிப்பது உங்களுக்கு சிறந்த மருந்து. இது தயாரிப்பது எளிது, உங்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது, மேலும் நாளுக்கு உங்களை தயார்படுத்துகிறது. மிதமான சூடு அல்லது சாதரண தண்ணீரில், அரை எலுமிச்சை பழத்தின் சாறு சேர்க்கவும்.

எலுமிச்சை சாறு தயாரிக்கும் போது வெந்நீரைப் பயன்படுத்தாமல் இருக்கவும், எலுமிச்சையின் அதிகபட்ச பலன்களைப் பெற சர்க்கரை அல்லது பிற இனிப்புப் பொருட்களைச் சேர்க்கக் கூடாது என்பதில் கவனமாக இருங்கள்.

3.அரிசி, உருளைக்கிழங்கு, பீட்ரூட் மற்றும் சோளம் போன்ற மாவுச்சத்து நிறைந்த உணவுகளில் எலுமிச்சைச் சாற்றைச் சேர்ப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், ஏனெனில் இது உங்கள் உடலில் ஆரோக்கியமான சமநிலையை ஊக்குவிக்கும் அதே வேளையில் இரத்தச் சர்க்கரைக் கூர்மையைக் குறைக்கும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment