உலகம் முழுவதும் முட்டை மிகவும் விரும்பி உண்ணப்படும் ஒரு உணவு. இது பல ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளது, மேலும் முழுமையான புரதத்தின் சிறந்த ஆதாரங்களில் ஒன்றாகும்.
Advertisment
ஆனால் மற்ற எல்லா விஷயங்களைப் போலவே, முட்டை சாப்பிடுவதற்கும் நல்ல நேரம் மற்றும் கெட்ட நேரம் உள்ளது. சரியான நேரத்தில் சாப்பிட்டால் முட்டையின் நன்மைகள் பன்மடங்கு கிடைக்கும்.
காலை உணவு
Advertisment
Advertisements
தினசரி பிஸியான வாழ்க்கையில், உங்களுக்கு நேரம் குறைவாக இருந்தாலும், முட்டைகள் சரியான காலை உணவு மெனுவாகும். முட்டையால் செய்யப்பட்ட உணவைத் தயாரிக்க 5 முதல் 10 நிமிடங்கள் மட்டுமே ஆகும். மேலும், இது துத்தநாகம், மெக்னீசியம், இரும்பு போன்ற ஊட்டச்சத்துக்களில் நிறைந்துள்ளது, அனைத்து புரதங்களிலும் மிக முக்கியமானது. புரோட்டீன் நிறைந்த காலை உணவு உங்களை நீண்ட நேரம் முழுதாக வைத்திருக்கும்.
உடற்பயிற்சிக்கு பிறகு
அதிகப் புரதச் சத்து உள்ள முட்டை, உங்களின் உடற்பயிற்சிக்குப் பிந்தைய பசிக்கு ஏற்றது. இது ஆற்றலை வழங்குகிறது மற்றும் தசைகளை சரிசெய்ய உதவுகிறது.
ஓய்வெடுக்கும் கட்டத்தில் நம் உடல், தன்னைத்தானே சரிசெய்வதற்கு அதிக ஊட்டச்சத்துக்கள் தேவை, அதற்கு முட்டையை விட சிறந்தது எதுவுமில்லை. 2 முழு வேகவைத்த முட்டைகள் அல்லது சில தக்காளி, குடைமிளகாய் மற்றும் கீரையுடன் கூடிய ஆம்லெட் உங்களுக்கு உடனடியாக உற்சாகமளிக்கும்.
இரவில்
சில ஆய்வுகளின்படி, இரவு உணவிற்குப் பின் முட்டை ஆரோக்கியமான சிற்றுண்டி விருப்பமாக இருக்கலாம், ஆனால் அதேநேரம் அவை தூக்கமின்மைக்கு வழிவகுக்கும். முட்டையின் மஞ்சள் கருவில் உள்ள கொழுப்பு உள்ளடக்கம் எரிச்சலை ஏற்படுத்தலாம் மற்றும் தூக்கத்தில் இடையூறு ஏற்படுத்தலாம்.
இருப்பினும், வேறு சில ஆய்வுகளின்படி, இரவில் முட்டை சாப்பிடுவது உங்களுக்கு நன்றாக தூங்க உதவும். இரவில் முட்டை சாப்பிடும் போது, உங்களுக்கு சரியாக பொருந்துகிறதா என்பதை நீங்கள் பார்க்க வேண்டும். உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றால் இரவில் வேகவைத்த முட்டை சாப்பிடலாம், இல்லையெனில் தவிர்ப்பது நல்லது.
எடை குறைக்க முயற்சிக்கும்போது முட்டைகளை எவ்வாறு தயாரிப்பது
முட்டை சமைக்க நீங்கள் வெவ்வேறு சமையல் குறிப்புகளை முயற்சி செய்யலாம். முட்டை சாப்பிடுவதால் ஏற்படும் பலன்களை அதிகரிக்க சில விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.
எப்போதும் ஆரோக்கியமான எண்ணெயில் முட்டைகளை தயார் செய்யுங்கள்.
முட்டைகளை சமைக்க குறைந்த எண்ணெய் பயன்படுத்தவும்.
அதிகமாக சமைக்க வேண்டாம், ஏனெனில் இது ஊட்டச்சத்து குறைவதற்கு வழிவகுக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“