Advertisment

சுகர் பேஷன்ட்ஸ் கவனத்திற்கு... காலையில் வெறும் வயிற்றில் இதைக் குடிங்க!

இலவங்கப்பட்டையில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளது, இது ஒரு சிறந்த டிடாக்ஸ் பானமாக அமைகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Health tips in tamil

Health tips in tamil Tips to add Cinnamon for diabetes

உங்கள் உடலில் உள்ள சர்க்கரை அளவை சமாளிக்க உதவும் பல வீட்டு வைத்தியங்கள் உள்ளன. அதில் ஒன்றுதான் இலவங்கப்பட்டை.

Advertisment

இலவங்கப்பட்டை டைப் 2 நீரிழிவு நோயாளிகளில் இரத்த குளுக்கோஸ் மற்றும் கொழுப்பின் அளவை மேம்படுத்துகிறது, ஒரு நாளைக்கு 1 கிராம் இலவங்கப்பட்டை உட்கொள்வது இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கும் மற்றும் டைப் 2 நீரிழிவு நோயை நிர்வகிக்க உதவும் என்பது கண்டறியப்பட்ட உண்மை.

இதில் குரோமியம் என்ற கனிமமும் உள்ளது, இது ஒருவரின் பசியைக் கட்டுக்குள் வைத்திருக்கும் மற்றும் உள்ளுறுப்பு கொழுப்பை அகற்ற உதவுகிறது. இலவங்கப்பட்டையில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளது, இது ஒரு சிறந்த டிடாக்ஸ் பானமாக அமைகிறது.

இலவங்கப்பட்டை எப்படி உட்கொள்வது?  

உங்கள் தினசரி உணவில் இலவங்கப்பட்டையை சேர்க்க பல வழிகள் இருந்தாலும், தண்ணீரில் சேர்த்து பருகுவது மிகவும் பயனுள்ள ஒன்றாகும். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒரு சிட்டிகை இலவங்கப்பட்டை தூள் அல்லது 1 அங்குல இலவங்கப்பட்டையை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் காலையில் கொதிக்க வைத்து வெறும் வயிற்றில் குடிக்கவும்.

உணவில் இலவங்கப்பட்டை சேர்க்கும் வேறு சில வழிகள் இங்கே!

இனிப்பு தயிரில் ஒரு சிட்டிகை இலவங்கப்பட்டை சேர்க்கலாம்.

ஆப்பிளை துண்டுகளாக வெட்டி, இலவங்கப்பட்டை தூள் தூவி சாப்பிடலாம்.

நட்ஸ் மற்றும் உலர்ந்த பழங்களை சிறிய துண்டுகளாக வெட்டி, அதன் மேல் இலவங்கப்பட்டை தூள் தூவி சாப்பிடலாம்.

பாலில் சாக்லேட் பவுடரைக் கலக்குவதற்குப் பதிலாக, ஒரு சிட்டிகை இலவங்கப்பட்டை தூள் சேர்க்கலாம்.

இலவங்கப்பட்டை நன்மையின் களஞ்சியமாக இருந்தாலும், உங்கள் அன்றாட உணவு பழக்கங்களில் மாற்றங்களைச் சேர்ப்பதற்கு முன்பு எப்போதும் மருத்துவரை அணுகுவது நல்லது.

எப்போதும் நினைவில் கொள்ளுங்கள், மிதமானது முக்கியமானது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment