உடல் எடையை அதிகரிக்க வேண்டுமா... அப்போ இதை குடியுங்கள்

ராகி எனப்படும் கேழ்வரகு, ஒரு சத்தான தானியமாகும். இது உடல் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளைத் தருகிறது. உடல் எடையை ஆரோக்கியமான முறையில் அதிகரிக்க உதவும் முளைகட்டிய ராகி சாக்லேட் மால்ட் தயாரிக்கும் முறை பற்றி பார்ப்போம்.

ராகி எனப்படும் கேழ்வரகு, ஒரு சத்தான தானியமாகும். இது உடல் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளைத் தருகிறது. உடல் எடையை ஆரோக்கியமான முறையில் அதிகரிக்க உதவும் முளைகட்டிய ராகி சாக்லேட் மால்ட் தயாரிக்கும் முறை பற்றி பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
ragi malt

ராகி கால்சியம் சத்தின் ஒரு சிறந்த ஆதாரமாகும். மற்ற தானியங்களை விட இதில் அதிக அளவு கால்சியம் உள்ளது. இது எலும்புகளின் வளர்ச்சி மற்றும் வலிமைக்கு மிக முக்கியமானது. குறிப்பாக, வளரும் குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் மெனோபாஸ் அடைந்த பெண்களுக்கு ஏற்படும் எலும்புத் தேய்மானம் போன்ற நோய்களைத் தடுக்க இது உதவுகிறது. அவ்வளவு சத்துக்கள் நிறைந்த ராகியை வைத்து சுவையான முளைகட்டிய ராகி சாக்லேட் மால்ட் தயாரிக்கும் முறை பற்றி சவுத் இந்தியன் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

ராகி (முளைக்கட்டி, காயவைத்து பவுடராக்கப்பட்டது)

பாதாம், முந்திரி, பிஸ்தா மற்றும் மக்கானா

காய்ந்த பேரிச்சம்பழம்

சுக்கு, ஏலக்காய், பனங்கற்கண்டு

கோகோ பவுடர்

செய்முறை:

Advertisment

இந்த மால்டைத் தயாரிக்க, முதலில் ராகியை முளைகட்ட வைக்க வேண்டும். இதற்கு, ராகியை நன்கு கழுவி நான்கு மணி நேரம் ஊறவைத்து, பின்னர் ஒரு துணியில் கட்டி ஒரு இரவு முழுவதும் வைத்தால் ராகி முளைக்கட்டி வரும். இந்த முளைகட்டிய ராகியை இரண்டு முதல் மூன்று நாட்களுக்கு வெயிலில் நன்கு காயவைத்து, பின்னர் மாவாக அரைத்துக்கொள்ள வேண்டும். இந்த மாவுதான் மால்டின் முக்கிய ஆதாரம்.

அடுத்து, பாதாம், முந்திரி, பிஸ்தா மற்றும் மக்கானா ஆகியவற்றை ஒரு கடாயில் வறுத்து ஆறவிட வேண்டும். இந்த நட்ஸ்களுடன், உலர்ந்த பேரீச்சம்பழம், சுக்கு, ஏலக்காய், பனங்கற்கண்டு மற்றும் கோகோ பவுடர் ஆகியவற்றைச் சேர்த்து, மிக்ஸி ஜாரில் நைசாக அரைத்துக்கொள்ள வேண்டும். உலர்ந்த பேரீச்சம்பழம் மற்றும் பனங்கற்கண்டு ஆகியவை இயற்கையான இனிப்புச் சுவையையும், சுக்கு மற்றும் ஏலக்காய் ஆகியவை சிறந்த மணத்தையும், செரிமானத்திற்கும் உதவுகிறது.

Advertisment
Advertisements

இறுதியாக, இந்த அரைத்த கலவையை முளைகட்டிய ராகி மாவுடன் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். இதை காற்றுப்புகாத ஒரு டப்பாவில் சேமித்து வைத்து தேவைப்படும்போது பயன்படுத்தலாம். இந்த மால்டை வெதுவெதுப்பான பாலில் கலந்து குடிப்பதன் மூலம், உடலுக்குத் தேவையான புரதச்சத்து, நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாது உப்புகள் அனைத்தும் கிடைக்கும். கோகோ பவுடர் சேர்ப்பதால், சாக்லேட் சுவையுடன் இருப்பதால், குழந்தைகள் இதை விரும்பி அருந்துவார்கள்.

இந்த மால்ட் உடலுக்கு ஆற்றலைக் கொடுப்பதுடன், எலும்புகளை வலுப்படுத்தவும், ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவும் உதவுகிறது. மேலும், இது செரிமானத்திற்கும் துணைபுரிகிறது.

Health benefits of eating ragi

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: