Advertisment

பெண்கள் அகத்திக் கீரை கட்டாயம் சாப்பிடணும்; சுவையான ரசம் இப்படி பண்ணுங்க!

அகத்திக் கீரை ரசம் செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Agathi keerai

Food

கால்சியம் சத்து நிறைந்த அகத்திக் கீரை ரெசிபி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

Advertisment

தேவையான பொருட்கள்

அகத்திக் கீரை - 1 கட்டு

சீரகம், தனியா - தலா 1 டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 3

சின்ன வெங்காயம் - 1 கப்

தேங்காய் - அரை கப்

புளி - சிறிதளவு

உப்பு, நல்லெண்ணெய் - தேவைக்கு ஏற்ப

கடுகு, கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை

அகத்திக் கீரையை நன்றாக சுத்தம் செய்து சுடு நீரில் போட்டு வேக வைத்து எடுத்து தண்ணீரை வடிக்கவும். சீரகம், தனியா, காய்ந்த மிளகாய், சின்னவெங்காயம், தேங்காய் இவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைக்கவும். சிறிதளவு புளியை தண்ணீரில் ஊற வைத்து கரைக்கவும்.

இப்போது அடுப்பில் கடாய் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின்னர் அதில் புளிக்கரைசலை ஊற்றி கொதிக்கவிடவும். அடுத்து வேகவைத்த கீரை, மசாலா விழுதைச் சேர்த்து தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும். இப்போது சத்து நிறைந்த சுவையான அகத்திக் கீரை ரசம் தயார். பெண்களுக்கு தாய்ப் பால் ஊற அகத்திக் கீரை மிகவும் உதவும். இதற்கு அகத்திக் கீரையில் ரசம் வைத்து சாப்பிடுவது நல்லது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Food Recipes
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment