/indian-express-tamil/media/media_files/2025/09/09/screenshot-2025-09-09-165319-2025-09-09-16-53-41.jpg)
பாதாம் பருப்பு உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என பெரும்பாலான மக்களுக்கு தெரியும். ஆனால் அவை என்ன என்பது குறித்து முழுமையாக தெரியுமா ? பாதாம் பருப்புகளில் கொழுப்பு, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் ஆகியவை உள்ளன. பாதாம் வழங்கும் ஊட்டச்சத்து உங்கள் உடலுக்கு பல வழிகளில் பயனளிக்கும். உங்கள் இதயம், எலும்புகள் அல்லது லிபிடோவை வலுப்படுத்த நீங்கள் விரும்பினால் அதற்கு பாதாம் உதவக்கூடும்.
பாதாம் சாப்பிடுவது குறைந்த அடர்த்தி கொழுப்புப்புரதம் (LDL) எனப்படும் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது மற்றும் நல்ல வகையான உயர் அடர்த்தி கொழுப்புப்புரதத்தின் (HDL) அளவை அதிகரிக்க உதவுகிறது. இதய நோய்களிலிருந்து உங்களைப் பாதுகாக்க உதவும் அழற்சி எதிர்ப்பு பண்புகளும் பாதாமில் உள்ளன.
பாதாமில் கலோரிகளில் அதிகமாக இருந்தாலும் அவை எடை அதிகரிப்பு மற்றும் உடல் பருமன் அபாயத்தைக் குறைக்க உதவும். பாதாமில் உள்ள புரதம் மற்றும் நார்ச்சத்து உங்களை விரைவாக முழுதாக உணர உதவுகிறது. எனவே பாதாம் உங்கள் பசியை திருப்திப்படுத்தும் அதே வேளையில் கலோரி உட்கொள்ளலை சிறப்பாகக் கட்டுப்படுத்தும்.
இப்படி பட்ட ஒரு உணவை வைத்து சுவையான அல்வா எப்படி செய்வதென்று இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
பாதாம் பருப்பு -இரண்டு கைப்பிடி
கேரட் துருவல் -ரெண்டு கப்
பால்- ஒரு கப்
கண்டன்ஸ்டு மில்க்- அரை கப்
நெய் -நாலு டேபிள் ஸ்பூன்
சர்க்கரை -ஒரு கப்
ஏலப்பொடி- ஒரு டீஸ்பூன்
முந்திரி துண்டுகள் வறுத்தது- 15
செய்முறை:
பாதாம் பருப்பை ஒருமணி நேரம் ஊறவைத்து தோல் உரித்து சிறிதளவு பால் விட்டு மிக்ஸியில் நைசாக அரைத்து எடுக்கவும். கேரட் துருவலில் சிறிதளவு பால் விட்டு வெந்ததும், ஆறவிட்டு மிக்ஸியில் அரைத்து எடுத்து, அதனுடன் பாதாம் விழுதையும் சேர்த்து கலந்து ஒரு அடிகனமான பாத்திரத்தில் போட்டு கண்டன்ஸ்டு மில்க் சர்க்கரை சேர்த்து குறைந்த தணலில் வைத்து ஐந்து நிமிடம் நன்றாக கிளறவும். கமகம வாசனை வரும்பொழுது ஏலப் பொடி தூவி இறக்கவும். அல்வாவை பாத்திரத்தில் சமனாக்கி அதன் மீது முந்திரி துண்டங்களை பதிக்கவும்.
பாதாமுடன் சமஅளவு தேங்காய்த் துருவலை சேர்த்து அரைத்து இதேபோல் செய்தாலும் அல்வா சுவையாக இருக்கும். பாதாம், முந்திரி இரண்டையும் ஊறவைத்து அரைத்து செய்தாலும் சூப்பரோ சூப்பர். வீட்டினர் விருப்பப்படி செய்து கொடுத்து அசத்துங்க.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.