காரா பாத், ரவை மற்றும் காய்கறிகளைப் பயன்படுத்தி செய்யப்படும் ஒரு பாரம்பரிய தென்னிந்திய காலை உணவு. இது பொதுவாக சாம்பார் மற்றும் சட்னியுடன் சேர்த்து பரிமாறப்படும் ஒரு ஆரோக்கியமான மற்றும் சுவையான உணவாகும். இதனை எப்படி செய்வது என்று ஹோம் குக்கிங் தமிழ் இன்ஸ்டா பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
ரவை - 1 கப்
பீன்ஸ் - 1 கப் நறுக்கியது
கேரட் - 1 கப் நறுக்கியது
பச்சை பட்டாணி - 1/4 கப்
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
நெய் - 1 மேசைக்கரண்டி
கடலை பருப்பு - 1 தேக்கரண்டி
முந்திரி பருப்பு
கடுகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
வெங்காயம் - 1 நறுக்கியது
பச்சை மிளகாய் - 3 கீறியது
இஞ்சி - 1 துண்டு நறுக்கியது
தண்ணீர் - 1 1/2 கப்
வெஜிடபிள் ஸ்டாக் - 1 1/2 கப்
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
தக்காளி - 1 நறுக்கியது
உப்பு - 1 தேக்கரண்டி
துருவிய தேங்காய்
கறிவேப்பிலை
கொத்தமல்லி இலை
செய்முறை:
ஒரு பாத்திரத்தில், சிறிது தண்ணீர் ஊற்றி, ஒரு கப் நறுக்கிய பீன்ஸ் சேர்க்கவும். ஒரு கப் நறுக்கிய கேரட் மற்றும் பட்டாணி, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து, நன்கு கலந்து, பாத்திரத்தை மூடி ஐந்து நிமிடங்கள் சமைக்கவும். ஐந்து நிமிடம் கழித்து காய்கறிகளை வடிகட்டி தனியாக வைக்கவும்.
ஒரு அகன்ற கடாயில் எண்ணெய், நெய், கடலை பருப்பு, முந்திரி பருப்பு சேர்த்து வறுக்கவும். பிறகு கடுகு, சீரகம் சேர்த்து வதக்கி, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும். அவற்றை நன்றாக வதக்கவும். அடுத்து ரவா சேர்த்து மூன்று நிமிடம் வறுக்கவும். தண்ணீர் சேர்த்து, வெஜிடபிள் ஸ்டாக் தண்ணீர் சேர்த்து கலக்கவும்.
உப்பு, மஞ்சள் தூள், நறுக்கிய தக்காளி மற்றும் வேகவைத்த காய்கறிகள் சேர்க்கவும். எல்லாவற்றையும் நன்றாக கலக்கவும். கடாயை மூடி, மிதமான தீயில் ஐந்து நிமிடம் சமைக்கவும்.
ஐந்து நிமிடம் கழித்து கடாயை திறந்து சிறிது நெய் ஊற்றவும். புதிதாக துருவிய தேங்காய், சில கறிவேப்பிலை மற்றும் சில நறுக்கிய கொத்தமல்லி இலைகள் சேர்த்து ஒன்றாக கலக்கவும். சுவையான காரா பாத் உங்கள் விருப்பப்படி சாம்பார் மற்றும் சட்னியுடன் சூடாக பரிமாற தயாராக உள்ளது.