ஒவ்வொரு நாளும் விதவிதமான மதிய உணவு எடுத்துச் செல்ல வேண்டும் என்று நினைப்பவரா நீங்கள்? அப்படியென்றால், இந்த லஞ்ச் ரெசிபி உங்களுக்கு தான். சுவையான மற்றும் சத்தான கேரட் சாதத்தை எப்படி சிம்பிளாக செய்யலாம் என்று இதில் காண்போம்.
தேவையான பொருட்கள்:
எண்ணெய்,
கடுகு,
உளுந்து,
கடலை பருப்பு,
முந்திரி பருப்பு,
கறிவேப்பிலை,
பச்சை மிளகாய்,
பெரிய வெங்காயம்,
கேரட்,
உப்பு,
மஞ்சள் தூள்,
மிளகாய் தூள்,
பாஸ்மதி அரிசி,
எலுமிச்சை சாறு மற்றும்
கொத்தமல்லி இலைகள்.
செய்முறை:
அடுப்பில் கடாய் வைத்து அதில் தேவைக்கேற்ப எண்ணெய் ஊற்றிக் கொள்ளலாம். இதில் கடுகு, உளுந்து, கடலை பருப்பு மற்றும் முந்திரி பருப்பு ஆகிய அனைத்தையும் சேர்த்து பொந்நிறமாக வறுக்க வேண்டும்.
இதையடுத்து, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், நறுக்கி வைத்த பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். இதில் வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும், பொடியாக துருவிய கேரட்டை சேர்த்து கலக்க வேண்டும்.
இவ்வாறு கலக்கிய பின்னர் இரண்டு நிமிடங்கள் கழித்து தேவையான அளவு உப்பு, சிறிது மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து கலக்கவும். மிளகாய் தூளின் பச்சை வாசனை நீங்கிய பின்னர், வடித்த பாஸ்மதி சாதம் சேர்க்கவும். இத்துடன் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்தால் சுவையான கேரட் சாதம் தயாராக இருக்கும். இறுதியாக, கொத்தமல்லி இலைகள் தூவி இறக்கி விடலாம்.