வாய்க்கு ருசியாக சும்மா சுருக்குன்னு சாப்பிட வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த பூண்டு மிளகு குழம்பு ரெசிபியை ட்ரை பண்ணலாம். இது சுவையாக இருப்பது மட்டுமின்றி, வாயுத் தொல்லையை போக்கக் கூடிய ஆற்றலும் கொண்டுள்ளது.
தேவையான பொருட்கள்:
மல்லி,
மிளகு,
சீரகம்,
வெந்தயம்,
கடலை பருப்பு,
காய்ந்த மிளகாய்,
அரிசி,
கறிவேப்பிலை,
எண்ணெய்,
தாளிப்பு வடகம்,
சின்ன வெங்காயம்,
பூண்டு,
மஞ்சள் தூள்,
உப்பு,
புளி கரைசல்.
செய்முறை:
ஒரு டேபிள் ஸ்பூன் மல்லி, மிளகு, அரை டேபிள் ஸ்பூன் சீரகம், கால் ஸ்பூன் வெந்தயம், அரை டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு, 4 காய்ந்த மிளகாய், கால் ஸ்பூன் அரிசி மற்றும் சிறிது கறிவேப்பிலை ஆகியவற்றை கடாயில் போட்டு வறுக்க வேண்டும்.
அதன் பின்னர், இவை அனைத்தையும் பசை பதத்திற்கு மிக்ஸியில் அரைக்க வேண்டும். இனி அடுப்பில் இருக்கு கடாயில் நான்கு டேபிள் ஸ்பூன் எண்ணெய், தாளிப்பு வடகம், அரை கப் சின்ன வெங்காயம், கொஞ்சமாக கறிவேப்பிலை, ஒரு கப் பூண்டு சேர்த்து ஒரு நிமிடம் வதக்க வேண்டும்.
இதையடுத்து, அரைத்து வைத்திருக்கும் மசாலாவை இத்துடன் சேர்க்க வேண்டும். தேவையான அளவு தண்ணீர், கால் ஸ்பூன் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கலக்கவும். இது கொதிக்கும் போது புளி கரைசல் ஊற்ற வேண்டும்.
இதில் இருந்து எண்ணெய் பிரிந்து வரும் போது கொஞ்சமாக கறிவேப்பிலை தூவி இறக்கினால் சுவையான பூண்டு மிளகு குழம்பு தயாராகி விடும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.