அல்சர், வாய்ப் புண்ணை குணப்படுத்தும் ஆற்றல் கொண்ட மணத்தக்காளி கீரை கொண்டு தண்ணி சாறு எவ்வாறு செய்யலாம் என்று இந்த சமையல் குறிப்பில் பார்க்கலாம். இது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
அல்சர், வாய்ப் புண்ணை குணப்படுத்தும் ஆற்றல் கொண்ட மணத்தக்காளி கீரை கொண்டு தண்ணி சாறு எவ்வாறு செய்யலாம் என்று இந்த சமையல் குறிப்பில் பார்க்கலாம். இது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
கிராமத்து ஸ்டைலில் சுவையான மணத்தக்காளி தண்ணி சாறு எப்படி செய்யலாம் என்று இந்தப் பதிவில் பார்க்கலாம். அல்சர் புண்ணை ஆற்றக் கூடிய மருத்துவ குணம் இதில் நிறைந்துள்ளது.
Advertisment
தேவையான பொருட்கள்:
மணத்தக்காளி கீரை, தேங்காய் பால், அரிசி ஊற வைத்த தண்ணீர், எண்ணெய், வெந்தயம், சீரகம், மிளகு, சின்ன வெங்காயம், பூண்டு, மஞ்சள் தூள்.
செய்முறை:
Advertisment
Advertisements
ஒரு கட்டு மணத்தக்காளி கீரையை சுத்தம் செய்து ஒரு கைப்பிடி அளவிற்கு எடுத்து அதனை சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். இதனிடையே, ஒன்றரை கப் அளவிற்கு தேங்காய் பால் எடுத்துக் கொள்ளலாம். மேலும், அரிசி ஊற வைத்த தண்ணீரும் தனியாக எடுத்துக் கொள்ளவும்.
இப்போது, அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம். இந்த எண்ணெய் காய்ந்ததும் அரை டீஸ்பூன் வெந்தயம், சீரகம், 8 மிளகு, இரண்டு மிளகாய், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், பூண்டு ஆகியவை சேர்த்து வதக்க வேண்டும்.
இவை பொந்நிறமாக மாறியதும் மணத்தக்காளி கீரையையும் இதில் சேர்க்க வேண்டும். கீரை சுருங்கும் வரை இதனை வதக்க வேண்டும். அதன் பின்னர், கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கலக்கலாம்.
இதன் பின்னர், அரிசி கழுவிய தண்ணீர் சேர்த்து 10 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும். இது பாதி வெந்ததும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும். இறுதியாக, தேங்காய் பால் சேர்த்து மிதமான சூட்டில் கலக்க வேண்டும். இதனை இரண்டு நிமிடங்கள் கழித்து இறக்கினால் மணத்தக்காளி தண்ணி சாறு தயாராகி விடும்.