ஒரு சாதாரண துவையல் உங்களுடைய நீண்ட நாள் கவலையான கை, கால், இடுப்பு வலிக்கு நிவாரணம் அளிக்கும் என்று கூறினால் உங்களால் நம்ப முடிகிறதா? அப்படி ஒரு சத்தான பிரண்டை துவையல் எவ்வாறு சிம்பிளாகவும், சுவையாகவும் செய்யலாம் என்று இந்தப் பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
நல்லெண்ணெய்,
உளுந்து,
மல்லி,
இஞ்சி,
பூண்டு,
காய்ந்த மிளகாய்,
பிரண்டை,
புளி,
வெல்லம்,
உப்பு மற்றும்
கடுகு
செய்முறை:
அடுப்பில் கடாய் வைத்து அதில் இரண்டு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றவும். இதில் இரண்டு டேபிள் ஸ்பூன் உளுந்து, மல்லி, சிறிய துண்டு இஞ்சி, 10 பூண்டு மற்றும் காய்ந்த மிளகாய்கள் சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும்.
இவற்றை நன்கு வறுத்த பின்னர், இத்துடன் ஒரு கட்டு பிரண்டையை நார் நீக்கி சுத்தம் செய்து சேர்க்க வேண்டும். மேலும், ஒரு பெரிய நெல்லிக்காய் அளவிற்கு புளியை இத்துடன் சேர்த்து வதக்கலாம்.
இதனை பச்சை வாசனை நீங்கும் வரை வதக்க வேண்டியது அவசியம். இதன் சூடு ஆறியதும் மிக்ஸியில் தேவையான அளவு உப்பு சேர்த்து அரைக்கலாம். இதனிடையே, அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் நல்லெண்ணெய், மிக்ஸியில் அரைத்தக் கலவை மற்றும் கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும்.
இதில் இருந்து எண்ணெய் பிரிந்து வரும் போது இறுதியாக சிறிய துண்டு வெல்லம் சேர்த்து இறக்கலாம். இவ்வாறு செய்தால் சத்தான மற்றும் சுவையான பிரண்டை துவையல் ரெடியாகி விடும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.