இரவு நேரத்தில் சாப்பிடக் கூடிய ஹெல்தியான ராகி பன் தோசை செய்முறையை இந்த சமையல் குறிப்பில் காணலாம். இது சுவையாக இருப்பது மட்டுமின்றி உடலுக்கு பல்வேறு ஊட்டச்சத்துகளையும் அளிக்கும்.
தேவையான பொருட்கள்:
ராகி மாவு,
ரவை,
தயிர்,
உப்பு,
தண்ணீர்,
எண்ணெய்,
கடுகு,
கடலை பருப்பு,
உளுத்தம் பருப்பு,
சீரகம்,
பெரிய வெங்காயம்,
பச்சை மிளகாய்,
கறிவேப்பிலை.
செய்முறை:
ஒரு கப் ராகி மாவு, ரவை, தயிர், தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இந்த மாவு ஊறிய பின்னர், மிக்ஸியில் சேர்த்து நைசாக அரைக்க வேண்டும். இதன் பின்னர், அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும்.
இதில், கடுகு, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, சீரகம், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து வதக்கலாம். இதில் இருக்கும் வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை வதக்குவது முக்கியம்.
அதன் பின்னர், ராகி தோசை மாவுடன் இவற்றை சேர்த்து கலக்கலாம். இனி, அடுப்பில் தாளிப்பு கரண்டி வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்ற வேண்டும். இதில், ஒரு கரண்டி ராகி மாவு சேர்த்து வேக வைத்து எடுத்தால் சுவையான மற்றும் சத்தான பன் தோசை ரெடியாகி விடும்.