ஹோட்டலில் சப்பாத்தி சாஃப்டா இருக்க மாதிரியே வீட்டிலையும் சப்பாத்தி சாஃப்டா செய்யலாம். அப்படி சாப்பிட்டா சப்பாத்தி செய்யறதுக்கு இந்த வழிமுறைகளை மட்டும் பின்பற்றுங்கள் போதுமானது.
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு - 1/2கிலோ
மைதா மாவு - 2 டீஸ்பூன்
கொண்டைக்கடலை மாவு - 50கிராம்
சர்க்கரை
எண்ணெய்
அரை கிலோ கோதுமை மாவுடன் 2 டீஸ்பூன் மைதா மாவு சேர்க்கவும். இதனுடன் 50 கிராம் கொண்டைக்கடலை மாவு இதை அனைத்தையும் நன்றாக கலந்து தேவையான அளவு உப்பு போட்டு ஒரு ஸ்பூன் சர்க்கரை மற்றும் தேவையான அளவு சூடு தண்ணீர் ஊற்றி மாவு பிசைய வேண்டும்.
கொண்டைக்கடலை மாவு பயன்படுத்தி சப்பாத்தி பிசையும்போது சாஃப்டாகவும் இருக்கும் வைக்கவும் சுவையை கூட்டியும் கொடுக்கும். இதில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து மாவு பிசைந்து எடுக்கவும்.
பின்னர் எப்போதும்போல மாவு பிசைந்து எடுத்து சப்பாத்தி சுட்டால் சப்பாத்தி எத்தனை நாட்கள் ஆனாலும் சாஃப்டாக இருக்கும். குழந்தைகள் சாப்பிடவும் மிருதுவாக இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“