Advertisment

வாழைப்பூவில் மொறு மொறு பஜ்ஜி: 10 நிமிடத்தில் செய்யலாம்

வாழைப்பூ பஜ்ஜி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
Food

Food

சத்து நிறைந்த் வாழைப்பூவில் மொறு மொறு பஜ்ஜி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

Advertisment

தேவையான பொருட்கள்

சுத்தம் செய்த வாழைப்பூ - 1 கப்

கடலை மாவு - 1 கப்

அரிசி மாவு - 5 டீஸ்பூன்

மஞ்சள் தூள், பெருங்காயம் - தலா 1 டீஸ்பூன்

சோள மாவு - 1 டீஸ்பூன்

மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை

முதலில் 1 பாத்திரம் எடுத்து அதில் கடலை மாவு, அரிசி மாவு, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், சோள மாவு, மிளகாய் தூள், உப்பு சேர்த்து சிறிது நீர் ஊற்றி பஜ்ஜி மாவு பதத்துக்குக் கரைத்துக் கொள்ளவும். இப்போது அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து ஒவ்வொரு வாழைப்பூவாக எடுத்து மாவில் முக்கி எண்ணெய்யில் போட்டு பொரித்தெடுக்கவும். அவ்வளவு தான் இப்போது சூப்பரான வாழைப்பூ பஜ்ஜி ரெடி.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Banana
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment