பாகற்காயில் வைட்டமின் ஏ, கே சத்துகள்: கசப்பே இல்லாத ரசம் இப்படி செய்யுங்க!

பாகற்காய் ரசம் செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

பாகற்காய் ரசம் செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
istockphoto-1372304641-612x612

Bitter Gourd

பாகற்காய் கசப்பான காய் என்றாலும் அதில் சத்துகள் நிறைந்துள்ளன. வைட்டமின் ஏ, கே சத்துகள் நிறைந்துள்ளன. முற்றிலும் இல்லை என்றாலும் சில நேரங்களில் சர்க்கரை, புளி சேர்த்து கசப்பை குறைத்து உணவு சமைக்கலாம். அந்த வகையில் பாகற்காயில் ரசம் செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

Advertisment

தேவையான பொருட்கள்

பாகற்காய் - கால் கிலோ
மஞ்சள்தூள் - 1 டீஸ்பூன்
புளி - சிறிதளவு
கொத்தமல்லித் தழை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு

தாளிக்க

Advertisment
Advertisements

காய்ந்த மிளகாய் - 3
கறிவேப்பிலை - சிறிதளவு
கடுகு, வெந்தயம் - தலா ஒரு டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டீஸ்பூன்

செய்முறை

முதலில் புளியை சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து வைக்கவும். கொத்தமல்லியை பொடியாக நறுக்கி வைக்கவும். பாகற்காயை நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும். அடுத்து அடுப்பில் கடாய் வைத்து பாகற்காய் வதக்கி அதில் புளி கரைச்சல் ஊற்றி உப்பு, மஞ்சள் தூள் சேர்க்கவும். பாகற்காய் வெந்து, புளிக்கரைசல் ரசம் பதம் வந்ததும் அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்.

அடுத்து மற்றொரு கடாய்யை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, வெந்தயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்கவும். அவ்வளவு தான் இப்போது இதை எடுத்து ரசத்தில் சேர்த்து கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். இப்போது சூடான, ஆரோக்கியமான பாகற்காய் ரசம் ரெடி. இதை சாதத்துடன் சாப்பிடலாம். சூப்பாகவும் குடிக்கலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Food Recipes

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: