ஒரே ஒரு ஸ்பூன் எண்ணெயில் கிரிஸ்பி ஊத்தப்பம்: இதை ட்ரை பண்ணிப் பாருங்க!

நிறைய காய்கறிகள் மற்றும் குறைந்த எண்ணெயுடன் மொறுமொறுப்பான ஊத்தப்பம் ரெசிபி இங்கே

ஒரே ஒரு ஸ்பூன் எண்ணெயில் கிரிஸ்பி ஊத்தப்பம்: இதை ட்ரை பண்ணிப் பாருங்க!
uttapam recipe

ஊத்தப்பம், ஒரு சிறந்த காலை உணவு விருப்பமாகும். இது செய்வதற்கு மிகவும் எளிதானது, அதேநேரம் ஆரோக்கியமானதும் கூட. இதன் சிறந்த அம்சம் என்னவென்றால், அதை அப்படியே சாப்பிடலாம், அல்லது அதன் சுவையை அதிகரிக்க அதன்மேல் கேரட், வெங்காயம் என டாப்பிங் செய்யலாம்.

உங்கள் நாளை ஒரு சத்தான உணவுடன் தொடங்க விரும்பினால், ஊட்டச்சத்து நிபுணர் அர்ஜிதா சிங் பகிரும், நிறைய காய்கறிகள் மற்றும் குறைந்த எண்ணெயுடன் மொறுமொறுப்பான ஊத்தப்பம் ரெசிபி இங்கே உள்ளது.

எப்படி செய்வது?

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும்,சிறிது நெய் அல்லது எண்ணெய் தடவிய பிறகு, கடாயில் ஊத்தப்பம் மாவை ஊற்றவும்.

பின்னர், மாவின் மேல் உங்கள் விருப்பப்படி துருவிய காய்கறிகளை தூவி, லேசாக அழுத்தி விடவும்.

ஒரு பக்கத்தில் 5 நிமிடங்கள் சமைக்கவும், பின்னர் அதை புரட்டி மேலும் 2-3 நிமிடங்கள் சமைக்கவும். மிதமான தீயில் வைக்கவும்.

உங்கள் சுவையான ஊத்தப்பம் ரெடி.

தேங்காய் சட்னி மற்றும் சாம்பார் உடன் இதை பரிமாறவும்.

நீங்கள் புரதத்தை அதிகரிக்க விரும்பினால், ஊத்தப்பத்தில் உள்ள காய்கறிகளுடன் அரைத்த பனீர் அல்லது டோஃபுவைச் சேர்க்கவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: Healthy breakfast recipe crunchy uttapam recipe in tamil