தலைவலி, காய்ச்சல், சளி தொல்லை போன்ற பிரச்சனைகள் இருந்தால் சரியாக சாப்பிட முடியாமல் இருக்கும். ஆனால், அந்த நேரத்தில் எடுத்துக் கொள்ளக் கூடிய மருத்துவ குணம் வாய்ந்த மல்லி, உள்ளி துவையல் எப்படி சுலபமாக செய்யலாம் என்று இந்த சமையல் குறிப்பில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
எண்ணெய்,
சீரகம்,
மிளகு,
பூண்டு,
கறிவேப்பிலை,
வெந்தயம்,
வரமிளகாய்,
சின்ன வெங்காயம்,
உப்பு,
தக்காளி மற்றும்
கொத்தமல்லி இலைகள்.
செய்முறை:
முதலில் அடுப்பில் கடாய் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றவும். இதில் மல்லி விதைகள், சீரகம், மிளகு, பூண்டு மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
இதையடுத்து, சிறிதளவு வெந்தயம், வரமிளகாய் சேர்த்து மீண்டும் வதக்கவும். இதற்கடுத்து ஒரு கப் சின்ன வெங்காயம், தேவையான அளவு உப்பு, பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.
இறுதியாக, கொத்தமல்லி இலைகள் சேர்த்து மிக்ஸியில் பசை பதத்திற்கு அரைக்க வேண்டும். இவ்வாறு செய்தால் சுவையான மல்லி, உள்ளி துவையல் தயாராகி விடும். இது மருத்துவ குணம் மட்டுமின்றி சுவையாகவும் இருக்கும். எனவே, எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.