scorecardresearch

எள்ளு- வெல்லம் எவ்ளோ நல்லது பாருங்க… ஓவரா சாப்பிட்டா சுகர் கிடுகிடுன்னு குறைஞ்சிடும்!

இந்நிலையில் எள்ளில் கால்சியம் இருக்கிறது. இதை சைவம் சாப்பிடும் நபர்கள் எடுத்துக்கொள்ளலாம். சிலருக்கு பால் பொருட்கள் சாப்பிட்டால் ஒற்றுக்கொள்ளாது. அதனால் அவர்கள் எள்ளை எடுத்துகொள்ளலாம். கால் கப் எள்ளு, ஒரு கப் பால் எடுத்துக்கொண்டது சமமாக இருக்கும்.

எள்ளு- வெல்லம் எவ்ளோ நல்லது பாருங்க… ஓவரா சாப்பிட்டா சுகர் கிடுகிடுன்னு குறைஞ்சிடும்!

எள்ளு மற்றும் வெல்லத்தை நாம் சாதாரண உணவாக பார்க்கிறோம். குளிர் காலங்களில் இந்த இரண்டும் நம்மக்கு அதிக நன்மைகள் கொடுக்கும். குளிர் காலத்தில் உடலுக்கு சூடான பொருட்களை சாப்பிட வேண்டும் என்று ஆயுர்வேதம் கூறுகிறது.

இந்நிலையில் எள்ளில் கால்சியம் இருக்கிறது. இதை சைவம் சாப்பிடும் நபர்கள் எடுத்துக்கொள்ளலாம். சிலருக்கு பால் பொருட்கள் சாப்பிட்டால் ஒற்றுக்கொள்ளாது. அதனால் அவர்கள் எள்ளை எடுத்துகொள்ளலாம். கால் கப் எள்ளு, ஒரு கப் பால் எடுத்துக்கொண்டது சமமாக இருக்கும்.

இதுபோல வெல்லத்தில் இரும்பு சத்து, வைட்டமின் சி இருக்கிறது. பாரம்பரிய வைத்தியத்தில் இதை, சளி ஏற்பட்டால் பயன்படுத்துவோம் . மேலும் இது ஜீரணத்திற்கு உதவும் என்சைமை ஊக்குவிக்க உதவுகிறது. இதனால் மலச்சிக்கல் ஏற்படாது.

எள்ளின் நன்மைகள்: சர்க்கரை நோய் வராமல் தடுக்கும்.  இதில் கார்போஹைட்ரேட், அதிக புரோட்டீன் சத்து சக்கரை நோயை கட்டுபடுத்த உதவும்.

இதுபோல இதில் இருக்கும் மெக்னிஷியம் ,ரத்த சர்க்கரையை சீராக்குகிறது. மேலும் கொழுப்பு சத்தை சேரவிடாமல் தடுக்கிறது. கருப்பு எள்ளில் பைட்டோஸ்டிரால்ஸ் (phytosterols) இருப்பதால், கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைக்கும்.

இதில் இருக்கும் அதிக நார்சத்து, ஜீரணத்திற்கு உதவும். 

வெல்லத்தின் பயன்கள்

சோர்வாக இருந்தால், நன்றாக சக்தி கொடுக்க வெல்லம் உதவி செய்யும். மேலும் திடீர் என்று சோர்வாக உணரும் நபர்கள் சிறிது வெல்லம் சாப்பிடலாம்.

மாதவிடாய் வலியை குறைக்கும். இது சந்தோஷம் தரும் ஹார்மோனான என்டோர்பின்ஸை தூண்டும்  இதனால் பி.எம்.எஸ் குறைபாட்டில் ஏற்படும் மனநிலை மாற்றம், எரிச்சல் ஆகியவற்றை கையாள உதவும்.

இதுபோல சீரற்ற மாதவிடாய் இருப்பவர்கள் தொடர்ந்து வெல்லம் சாப்பிட்டால், மாதவிடாய் சீராக வாய்ப்பிருக்கிறது.  இதில் இரும்பு சத்து மற்றும் போலேட்  இருப்பதால் ரத்த சோகை ஏற்படாமல் தடுக்கும், இதில் இருக்கும் பொட்டாஷியம், உடலில் உள்ள எலக்ட்ரோலைட்டை சமமாக்குகிறது.  இதனால் சீரான உடல் எடையில் இருக்க உதவுகிறது.

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: Healthy eating sesame seeds jaggery