ஈவ்னிங் ஸ்நாக்ஸ் ஹெல்தியாவும் லைட் வெயிட்டாகவும் எப்படி செய்வது என்று பார்ப்போம். செஃப் வெங்கடேஷ் ஸ்டைலில் ஒரு ஈவ்னிங் ஸ்நாக்ஸ். ஈஸியான செலவு குறைவான ஹெல்தி ஸ்நாக்ஸ். அதுவும் அரைமணி நேரத்தில் தயார் செய்து விடலாம்.
தேவையான பொருட்கள்
அவல்
ரவை
உப்பு
கொத்தமல்லி
தயிர்
நெய்
கடுகு
காய்ந்த மிளகாய்
கருவேப்பிலை
மிளகாய் தூள்
பெருங்காயத்தூள்
இட்லி மிளகாய் தூள்
செய்முறை
ஒரு பவுலில் அவல் எடுத்து கழுவி வைத்துக்கொள்ளவும். கழுவும் போது அது ஊறிவிடும் எனவே கழுவி எடுத்துக் கொள்ளவும்.
பின்னர் அதில் உப்புமா ரவை சேர்த்துக் கொள்ளவும். அதில் கொத்தமல்லி, உப்பு, தயிர் சேர்த்து நன்கு பிசையவும். இவற்றை நன்கு சப்பாத்தி மாவு மாதிரி பிசையவும்.
பின்னர் இவற்றை உருட்டி பால் மாதிரி செய்து வேக வைக்கவும். வேக வைத்ததை இப்பொழுது தாளிக்க வேண்டும்.
Venkis masala bomb snack | Chef Venkatesh Bhat
அதற்கு ஒரு கடாயில் நெய் ஊற்றி காய்ந்த மிளகாய், கடுகு, கருவேப்பிலை போட்டு வதக்கவும். இப்போது அடுப்பை அணைத்து விட்டு அதே சூட்டில் மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், இட்லி மிளகாய் பொடி சேர்த்து கலந்து வேகவைத்து வைத்துள்ள அந்த உருண்டையை சேர்த்து கிளறினால் ரெடி ஆகிவிடும்.