சத்தான சுவையான ஈவ்னிங் ஸ்நாக்ஸ் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறீர்களா? அப்போ கண்டிப்பாக இந்த ஒரு ஈவ்னிங் ஸ்நாக்ஸ் ட்ரை பண்ணுங்க.
ரொம்ப ஹெல்தியான டேஸ்டியான ஒரு ஈவ்னிங் ஸ்நாக்ஸ்க்கு பச்சைப்பயறு வடை எப்படி செய்வது என்று ஹோம் குக்கிங் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
தேவையான பொருட்கள்
பச்சைப்பயறு
கல்லுப்பு
வெங்காயம்
பச்சை மிளகாய்
இஞ்சி
கறிவேப்பிலை
சோம்பு
சீரகம்
கொத்தமல்லி இலை
உப்பு
எண்ணெய்
செய்முறை
முதலில் பச்சைப்பயறை ஊறவைக்க வேண்டும். பிறகு ஊறவைத்துள்ள பச்சைப்பயறை மிக்சியில் சேர்த்து இரண்டு முறை அரைக்கவும்.
முதலில் கல்லுப்பு, பாதி பச்சைப்பயறு ஆகியவற்றை மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் சிறிது கொரகொரப்பாக அரைத்து தனியாக வைக்கவும்.
பச்சைப்பயறு வடை | Green Gram Vada Recipe In Tamil | Tea Time Snacks | Evening Snacks | Vadai Recipes
பிறகு மிக்ஸி ஜாரில் மீதமுள்ள பச்சைப்பயறு, பச்சை மிளகாய், நறுக்கிய இஞ்சி, சோம்பு, சீரகம் சேர்த்து அரைத்த கலவையுடன் தண்ணீர் சேர்க்காமல் நன்றாகக் கலக்கவும்.
வடை கலவையில் சிறிதளவு உப்பு மற்றும் நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து நன்கு கலந்து வடை போல் செய்து மிதமான தீயில் ப்ரை செய்தால் மிகவும் சுவையாக இருக்கும் பச்சைப்பயறு வடை தயார்.