சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு அதை சாப்பிடக் கூடாது, இதை சாப்பிடக் கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகள் இருக்கும். குறிப்பாக கார்போஹைட்ரேட் உள்ள பொருட்களை அதிகம் எடுத்துக் கொள்ளக் கூடாது என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
Advertisment
இந்தநிலையில், சர்க்கரை வியாதிக்காரர்கள் மூன்று வேளையும் சாப்பிடக் கூடிய உணவை டாக்டர் அருண் கார்த்திக் பரிந்துரைக்கிறார். மேலும் இந்த உணவை சாப்பிடுவதால் ரத்த சர்க்கரை அளவு குறையும் என்றும் டாக்டர் அருண் கார்த்திக் கூறுகிறார்.
இதுதொடர்பாக டாக்டர் அருண் கார்த்திக் தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவின்படி, நாம் சாப்பிடும் உணவில் 3 வேளையும் தயிர் சேர்த்துக் கொண்டால் ரத்த சர்க்கரை அளவு கணிசமாக குறையும். இதனை மூன்று காரணங்களுடன் விளக்கலாம். தயிரில் உள்ள 3 விஷயங்கள் ரத்த சர்க்கரையை குறைக்கிறது.
தயிரில் உள்ள லாக்டிக் அமிலம் ரத்த சர்க்கரை அதிகரிப்பைக் கட்டுப்படுத்துகிறது. அடுத்ததாக தயிரில் உள்ள புரதச் சத்தான கேசின், புரதத்தை மெதுவாக வெளியிடும். எனவே இதனை உணவில் சேர்த்துக் கொண்டால் கார்போஹைட்ரேட் அதிகரிப்பைக் குறைக்கும். இதன்மூலம் ரத்த சர்க்கரை அதிகரிப்பைக் கட்டுப்படுத்தும்.
Advertisment
Advertisements
அடுத்து தயிரில் உள்ள மிக முக்கியமான அம்சம் ப்ரோபயாடிக். குறுகிய சங்கிலி கொழுப்பு அமிலம் என்பதை இந்த ப்ரோபயாடிக் உற்பத்தி செய்கிறது. இந்த கொழுப்பு அமிலம் கல்லீரலில் வினைபுரிந்து இன்சுலின் எதிர்ப்பைக் குறைக்கிறது. எனவே காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் ஒரு கப் தயிர் எடுத்துக் கொண்டால் இரத்த சர்க்கரை அளவு கணிசமாக குறையும்.