பிடித்த காய்கறியை விட பிடிக்காத காய்கறிகள் தான் அதிகம் இருக்கிறது. அப்படி பெரும்பாலானோருக்கு பிடிக்காத காய்கறிகளில் ஒன்றுதான் பீட்ரூட். இந்த பீட்ரூட் அனைவருக்கும் பிடித்த மாதிரி எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
இந்த பதிவில் உள்ளது போல் பீட்ரூட் பொரியல் செய்து கொடுங்க அப்புறம் வேண்டாம் என்றே சொல்ல மாட்டார்கள்.
தேவையான பொருட்கள்:
பீட்ரூட்
எண்ணெய்
கடுகு
சின்ன வெங்காயம்
பூண்டு
காய்ந்த மிளகாய்
மஞ்சள் தூள்
தேங்காய்
கருவேப்பிலை
உப்பு
முதலில் ஒரு பீட்ரூட்டை எடுத்து சிறியதாக நறுக்கி இதனை பாத்திரத்தில் சேர்த்து வேகின்ற அளவிற்கு தண்ணீர் ஊற்ற வேண்டும். இதனுடன் தேவையான அளவு உப்பு, சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும்.
பின்னர் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகாய் சேர்த்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். குறிப்பாக தண்ணீர் ஊற்றாமல் அரைத்து கொள்ளவும். பிறகு பாதி தேங்காய் மூடி எடுத்து துருவி எடுத்து கொள்ளவும்.
அடுப்பில் ஒரு கடாய் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கடுகு சேர்த்து கொள்ளவும். கடுகு பொரிந்ததும் கருவேப்பிலை ஒரு கொத்து, அரைத்து வைத்த மசாலாவையும் சேர்த்து வதக்கி கொள்ளவும். பின் இதில் பீட்ரூட்டையும் சேர்த்து 2 நிமிடத்திற்கு வதக்கி விட்டு அடுப்பை அணைத்து விடவும்.
இப்படி வேகவைத்து பீட்ரூட் செய்வதன் மூலம் குழந்தைகள் முதல் அனைவரும் அதனை விரும்பி சாப்பிடுவார்கள். பீட்ரூட் தண்ணீர் கூட இதில் வீணாகாத வாறு பொறியலுடன் சேர்த்து வேக வைக்கலாம்.
இல்லையென்றால் அந்த வேகவைத்த தண்ணீரை கூட சப்பாத்தி மாவு பிசைவதற்கோ அல்லது குழந்தைகளுக்கு கூழ் செய்வதற்கும் சிறிது பயன்படுத்தலாம். நல்ல நிற்மும் அதில் உள்ள சத்துக்கள் கிடைக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“