கிட்னி பிரச்சனை? இத மட்டும் முதல்ல சாப்பிடாதீங்க: டாக்டர் நித்யா டிப்ஸ்

சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டவர்கள் மேற்கொள்ள வேண்டிய உணவு முறை மாற்றங்கள் தொடர்பாக மருத்துவர் நித்யா விளக்கம் அளித்துள்ளார். குறிப்பாக, இதனை தொடர்ச்சியாக பின்பற்ற வேண்டும் என்று அவர் அறிவுறுத்துகிறார்.

சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டவர்கள் மேற்கொள்ள வேண்டிய உணவு முறை மாற்றங்கள் தொடர்பாக மருத்துவர் நித்யா விளக்கம் அளித்துள்ளார். குறிப்பாக, இதனை தொடர்ச்சியாக பின்பற்ற வேண்டும் என்று அவர் அறிவுறுத்துகிறார்.

author-image
WebDesk
New Update
Kidney health

சிறுநீரக பிரச்சனை இருப்பவர்கள் சில வகையான உணவுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும் என்று கூறப்படுகிறது. அதன்படி, என்ன மாதிரியான உணவுகளை எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும், எந்த உணவுகளை சாப்பிடலாம் என்றும் மருத்துவர் நித்யா டாக்டர் இண்டர்வியூ யூடியூப் சேனலில் குறிப்பிட்டுள்ளார். 

Advertisment

சிறுநீரக பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் முதலாவதாக உப்பு எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார். இது தவிர உப்பு சுவை அதிகமாக இருக்கும் துரித உணவுகள், ஸ்நாக்ஸ் வகைகள் போன்றவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்துகிறார்.

ஏனெனில், இந்த பொருட்களை செரிமானம் செய்யும் ஆற்றல் சிறுநீரக பாதிப்பு இருப்பவர்களிடம் மிகவும் குறைவாக இருக்கும் என்று மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார். இதேபோல், அதிகமாக புரதச் சத்து நிறைந்த உணவுகளும் சாப்பிடக் கூடாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 

அதிலும், அசைவ உணவுகளை முற்றிலும் தவிர்த்து விட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். இது மட்டுமின்றி கீரை வகைகளையும் சேர்த்துக் கொள்ளக் கூடாது. உணவில் புளி சேர்க்காமல் சாப்பிட வேண்டும். இதற்கு மாற்றாக வேறு சில உணவுகளை சாப்பிடுவதன் சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும்.

Advertisment
Advertisements

இதற்காக வெள்ளைப் பூசணிக்காய், சுரைக்காய், பீர்க்கங்காய் ஆகிய காய்கறிகளை கட்டாயம் சாப்பிட வேண்டும். மேலும், அன்றாட உணவில் சின்ன வெங்காயம் சேர்த்துக் கொள்ள வேண்டும். தினந்தோறும், சிறிதளவு சின்ன வெங்காயத்தை அரை ஸ்பூன் நெய்யில் வதக்கி சாப்பிடலாம் என்று மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார்.

இதேபோல், பச்சை சுண்டைக்காயை நெய்யில் வதக்கி, சிறிது மிளகுத் தூள் சேர்த்து சாப்பிடலாம். வெள்ளைப் பூசணிக்காயை சிறிய துண்டுகளாக வெட்டி ஆவியில் வேக வைத்து சாப்பிட வேண்டும். இவை அனைத்தும் சிறுநீரகத்தின் செயல்பாடுகளை அதிகரிக்க உதவியாக இருக்கும்.

 

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Tips to keep your kidneys healthy

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: