Advertisment

வெந்தயம் 1 டீ ஸ்பூன், சீரகம் 1/4 டீ ஸ்பூன்... மழைக் காலத்திற்கு ஏற்ற பானம் இதுதான்!

மழைக் காலத்தில் சளி, காய்ச்சல் போன்ற உடல் நலக்குறைவு ஏற்படும். நோய் எதிர்ப்பு சக்தியை தரக் கூடிய ஆரோக்கிய உணவுகள் பற்றி இங்கு பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
ven seer

வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. மழைக் காலத்தில் பலருக்கும் சளி, காய்ச்சல் போன்ற உடல் நல பாதிப்பு ஏற்படும். பருவகால பாதிப்பு ஏற்படும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் போது சளி, காய்ச்சல் தொற்று ஏற்படுகிறது. மழைக் காலத்தில் கெட்ட பாக்டீரியாக்கள் அதிகம் பரவுகிறது. அந்த வகையில் நோய் எதிர்ப்பு சக்தியை தரக் கூடிய உணவு பற்றி இங்கு பார்ப்போம். மழை காலத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள் பற்றி Tamil360Tv என்ற யூடியூப் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. 

Advertisment

பூண்டு மழைக் காலத்திற்கு ஏற்ற சிறந்த உணவு பொருளாகும். ஏனெனில் இதில் அலிசென் என்ற பொருள் உள்ளது. அடுத்து மக்காச் சோளம் இதில் விட்டமின் ஏ,பி, இ அதிகம் உள்ளது. அதனால் இது நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டி உடலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. சோளத்தில் நார்ச்சத்து உள்ளது. அதனால் இது மலச்சிக்கல் பிரச்சனையையும் தீர்க்கும். கெட்ட பாக்டீரியாக்கள் எதிர்த்து போராட உதவும் ஆன்டி-ஆக்ஸிடென்ட்களும் உள்ளன. அதனால் இது மழைக் காலத்திற்கு ஒரு சிறந்த உணவாகும். 

அடுத்ததாக மழைக் காலத்தில் எண்ணெய் வகையான ஸ்நாக்ஸ் சாப்பிடாமல் சூடான சூப் குடிக்கலாம். மழைக் காலத்தில் சிலருக்கு ஜீரண பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதனால் உணவில் வெந்தயம், சீரகம் சேர்ப்பது நல்லது. அல்லது அதை ஒரு பானமாக எடுத்துக் கொள்ளலாம். இதற்கு வெந்தயம் 1 டீ ஸ்பூன், சீரகம் 1/4 டீ ஸ்பூன் எடுத்து 1 டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு தேன் அல்லது நாட்டுச் சர்க்கரை கலந்து குடிக்கலாம்.

அடுத்ததாக பால் சேர்க்காமல் வெந்தய டீ, இஞ்சிடீ, கிரீன் டீ போன்றவை குடிக்கலாம். இவற்றை குடித்து வர உடல் சுறுசுறுப்பாக ஆக்டிவ் ஆக இருக்கும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment