வெயிலுக்கு சில்லுன்னு சுவையாகவும் ஹெல்தியாகவும் குடிக்க ஒரு ஜூஸ் எப்படி செய்வது என்று பார்ப்போம். சுவையான பழ ஜூஸ் எப்படி செய்து சாப்பிடுவது என்று டீ கடை கிச்சன் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
Advertisment
தேவையான பொருட்கள்
வாழைப்பழம் பேரிச்சம்பழம் ஆப்பிள் அண்ணாச்சி பழம் மாதுளம் பழம் கருப்பு திராட்சை தேன் சீனி ஐஸ் வாட்டர் ஐஸ் கியூப் கலர் பொடி
செய்முறை
Advertisment
Advertisements
ஒரு அடிகனமான பாத்திரத்தில் வாழைப்பழம் மற்றும் கொட்டை நீக்கிய பேரிச்சம்பழம் சேர்த்து நன்கு மசித்து கொள்ளவும். பின்னர் அண்ணாசிப்பழத்தி ஜூஸாக அடித்து எடுத்து கொள்ளவும். அடுத்ததாக அனைத்து பழங்களையும் நறுக்கி சேர்த்து கலந்து கொள்ளவும்.
இதில் தேன், ஐஸ் தண்ணீர், சர்க்கரை அனைத்தையும் உங்களுக்கு தேவையான அளவு சேர்த்து கலந்து குடிக்கலாம்.
வீட்டில் சிறு பிள்ளைகள் இருந்தால் மசித்து கொடுக்கலாம். பழங்கள் வாயில் சிக்காமல் இருக்கும். தேவைப்பட்டால் ஆப்பிள் தோல் நீக்கி கொள்ளலாம். திராட்சை கொட்டை இல்லாமல் சேர்க்கலாம். ஃபுட் கலர் இருந்தால் சேர்க்கலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.