உணவு என்பது சுவைக்காக மட்டுமே இருக்கக் கூடாது என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். கூடுமானவரை, மருத்துவ குணங்கள் நிறைந்த பொருட்களை நமது உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. அந்த வகையில், வாயுத் தொல்லையில் இருந்து தீர்வு தரக் கூடிய பூண்டு குழம்பு எவ்வாறு சுவையாக செய்யலாம் என்று இதில் காண்போம்.
தேவையான பொருட்கள்:
எண்ணெய்,
பூண்டு,
கடுகு,
வெந்தயம்,
பெருங்காயம்,
கறிவேப்பிலை,
வெங்காயம்,
தக்காளி,
மிளகாய் தூள் மற்றும்
உப்பு.
செய்முறை:
அடுப்பில் கடாய் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றவும். இதில் பூண்டு சேர்த்து நன்றாக பொறிக்க வேண்டும். இதன் நிறம் சற்று மாறியதும் அவற்றை வெளியே எடுத்து விடலாம்.
இப்போது அதே எண்ணெய்யில் கடுகு, வெந்தயம், சிறிது பெருங்காயம், கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து தாளிக்க வேண்டும். வெங்காயம் பொந்நிறமாக மாறியதும் சிறியதாக வெட்டி வைத்திருக்கும் தக்காளியை சேர்க்கலாம்.
இதையடுத்து முதலில் எடுத்து வைத்திருந்த பூண்டு, மிளகாய் தூள், சமையல் மசாலா தூள் மற்றும் உப்பு சேர்த்து கலக்கவும். இறுதியாக குழம்புக்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்தால், சுவையான பூண்டு குழம்பு ரெடியாகி விடும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.