Advertisment

வயிற்று பிரச்சனைக்கு சிறந்த தீர்வு: இஞ்சி சட்னி செய்து பாருங்க

இஞ்சி சட்னி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Ginger chutney

Ginger

இஞ்சி வயிற்று பிரச்சனைகளுக்கு தீர்வாக உள்ளது. இஞ்சி வயிற்று கொழுப்பைக் கரைக்கும். இஞ்சி துவையல் சாப்பிட மலச் சிக்கல் பிரச்சனை தீரும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

Advertisment

இஞ்சி சட்னி செய்ய தேவையான பொருட்கள்

இஞ்சி - 250 கிராம்

வெங்காயம் - 2

பச்சை மிளகாய் - 7

காய்ந்த மிளகாய் - 6

புளி - 2 துண்டு

வெல்லம் - 1 துண்டு

துருவிய தேங்காய் - 2 கப்

கொத்தமல்லி இலை - 1/2 கப்

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - 1 டீஸ்பூன்

தாளிக்க

உளுத்தம் பருப்பு - 1/4 டீஸ்பூன்

சீரகம் - 1/4 டீஸ்பூன்

கடுகு - 1/4 டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 1 '

பெருங்காய தூள் - 1 டீஸ்பூன்

கறிவேப்பில்லை - சிறிதளவு

எண்ணெய் - 1 டீஸ்பூன்

செய்முறை

முதலில் இஞ்சி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். அடுத்து அடுப்பில் கடாய் வைத்து இஞ்சி, வெங்காயம், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் , புளி துண்டு சேர்த்து 5 நிமிடம் வதக்கவும். வெங்காயம் பாதி வதங்கியதும், இதில் தேங்காய் மற்றும் கொத்தமல்லி சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.

இதில் உப்பு சேர்த்து கிளறி அடுப்பை அணைத்து ஆறவிடவும். கலவை ஆறியதும் மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கவும். அடுத்து கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் உளுத்தம் பருப்பு, சீரகம், கடுகு, காய்ந்த மிளகாய், பெருங்காய தூள் மற்றும் கறிவேப்பில்லை சேர்த்து தாளித்து சட்னியில் சேர்க்கவும். அவ்வளவு தான் சுவையான இஞ்சி சட்னி தயார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Food Recipes
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment