மூங் டால் (Moong dal) எனக் கூடிய பாசிப் பருப்பில் பான் கேக் செய்யலாம். இது சுவை மட்டுமல்ல ஆரோக்கியத்திற்கும் உகந்தது என கூறியுள்ளனர்.
தேவையான பொருட்கள்
பாசி பருப்பு- 1 கப்
பச்சை மிளகாய்- 2
இஞ்சி-1 துண்டு
சமையல் சோடா- 1/2 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய் தூள் – தேவையான அளவு
கொத்தமல்லி தூள்- சிறிதளவு
மஞ்சள் தூள்-சிறிதளவு
உப்பு. தேவையான அளவு
பெரிய வெங்காயம்- 1
தக்காளி- 2
பெரிய குடைமிளகாய்- 1
ஸ்வீட் கார்ன்- அரை கப்
செய்முறை
முதலில் பாசிப் பருப்பை நன்கு கழுவி, தண்ணீரில் சுமார் இரண்டு மணி நேரம் ஊறவைத்து கொள்ளவும். பிறகு, அதை மீண்டும் கழுவி தண்ணீரை வடித்து எடுத்துக் கொள்ளவும். அடுத்து பருப்பை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து பேஸ்ட் போல் அரைத்து கொள்ளவும். ரொம்பவும் கெட்டியாக இருந்தால் தேவைக்கேற்ப ஒரு டீஸ்பூன் தண்ணீர் சேர்க்கலாம்.
அடுத்து, இந்த பேஸ்ட்டை ஒரு பாத்திரத்தில் மாற்றி, அதனுடன் பேக்கிங் சோடா, சிவப்பு மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கொள்ளவும். இதை நன்கு கலக்கவும். இதில் சில காய்கறிகளை சேர்த்து கலக்கலாம். இப்போது மாவு பதத்தில் இருக்கும்.
இந்நிலையில் அடுப்பி நான்-ஸ்டிக் தோசை கல் வைத்து 1 கரண்டி மாவு ஊற்றி எண்ணெய் சுற்றி ஊற்றவும். இரு புறமும் வேக வைத்து பொன்னிறமாக மாறியதும் எடுக்கவும். அவ்வளவு தான், சுவையான ஆரோக்கியமான மூங் டால் பான் கேக் (Moong dal pan cake) ரெடி. இந்த ரெசிபி குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். ட்ரை செய்து பாருங்க.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“