மார்னிங் டிபன்: குழந்தைகள் இனி வேண்டாம் என்று சொல்ல முடியாத முந்திரிப் பருப்பு கிச்சடி
காலையில் சமைக்க நேரம் இல்லாத சமையத்தில் கூட வெறும் 10 நிமிடத்தில் ஈஸியாக அதுவும் எல்லோருக்கும் பிடித்த மாதிரி ஒரு டிபன் ரெசிபி எப்படி செய்வது என்று பார்ப்போம்.
காலையில் சமைக்க நேரம் இல்லாத சமையத்தில் கூட வெறும் 10 நிமிடத்தில் ஈஸியாக அதுவும் எல்லோருக்கும் பிடித்த மாதிரி ஒரு டிபன் ரெசிபி எப்படி செய்வது என்று பார்ப்போம்.
ரவா கிச்சடி என்பது ஒரு சுவையான மற்றும் எளிதில் செய்யக்கூடிய காலை உணவு. இதை ஈவ்னிங் நேரத்தில் குட்டி பசியை ஆற்றக்கூட பிள்ளைகளுக்கு கொடுக்கலாம். இது ரவை, காய்கறிகள் கொண்டு செய்வதால் சத்தானதாகவும் இருக்கும் பிள்ளைகளுக்கு பசியை ஆற்றவும் உதவும். அவ்வளவு சுவையான ரவா கிச்சடி எப்படி செய்வது என்று ஹோம் குக்கிங் தமிழ் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
முதலில், ஒரு கடாயில் ரவாவை எடுத்து பொன்னிறமாக வறுத்து, ஒரு தட்டில் மாற்றி தனியே வைக்கவும். இது கிச்சடிக்கு நல்ல வாசனை கொடுக்கும். அடுத்து, ஒரு அகலமான கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும், கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, கடுகு, சீரகம் மற்றும் முந்திரி பருப்பு சேர்த்து தாளிக்கவும். கடுகு பொரிந்ததும், கறிவேப்பிலை சேர்க்கவும். இப்போது, நறுக்கிய வெங்காயம், இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
வெங்காயம் பாதி வதங்கியதும், நறுக்கிய பீன்ஸ், கேரட், வேகவைத்த பச்சை பட்டாணி மற்றும் நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு கலக்கவும். காய்கறிகள் ஓரளவு வேகட்டும். பின்னர், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து காய்கறிகளுடன் நன்கு கலக்கவும். இப்போது, ஏற்கனவே வறுத்து வைத்துள்ள ரவாவை சேர்த்து காய்கறிகளுடன் கலந்து விடவும். பின்பு, ஒரு கப் சூடு தண்ணீர் சேர்த்து, கடாயை மூடி, குறைந்த தீயில் சுமார் 5 நிமிடங்கள் வேகவிடவும். ரவா நீரை உறிஞ்சி பூப்போல வெந்திருக்கும்.
கடைசியாக, நறுக்கிய கொத்தமல்லி இலை மற்றும் நெய் சேர்த்து ஒரு முறை கலந்து அடுப்பை அணைக்கவும். அவ்வளவுதான் இதை தேங்காய் சட்னி, சாம்பார் வைத்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும். சூடாக இருக்கும்போதே சாப்பிடுவது நல்லது. ஆறிவிட்டால் சாப்பிடும்போது சுவை தெரியாது.