பொதுவாக பீனட் பட்டர் பலரது வீடுகளில் வாங்கி வைத்திருப்பர். பிரெட்டிற்கு சேர்த்து சாப்பிடுவது சுவையாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் தோசை மற்றும் பல உணவுகளில் வைத்து சாப்பிடுவர். அந்தவகையில் கடைகளில் வாங்காமல் ஹெல்தி பீனட் பட்டர் வீட்டுலேயே செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
வறுத்த வேர்க்கடலை - 2 1/2 கப்
உப்பு - 1 ஸ்பூன்
தேன் - 2 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டீஸ்பூன்
செய்முறை
முதலில் மிக்ஸியில் 1/2 கப் வறுத்த வேர்க்கடலையைச் சேர்த்து, கொரகொரப்பாக அரைத்து தனியாக எடுத்து வைத்து கொள்ளவும். அதே மிக்ஸியில் மீதமுள்ள 2 கப் வறுத்த வேர்க்கடலையை சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.
அடுத்து அதில் எண்ணெய், தேன், உப்பு சேர்த்து 1 முறை அரைக்கவும். கடைசியாக கொரகொரப்பா பொடித்த வேர்க்கடலையை சேர்த்து ஒரு முறை மிக்ஸியில் போட்டு சுற்றி கொள்ளவும். அவ்வளவு தான் இப்போது சுவையான பீனட் பட்டர் தயார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“