கை, கால், உடம்பு வலி பறந்து போகும்; குழந்தைகளுக்கு நல்ல சத்து... இந்த கஞ்சியை மிஸ் பண்ணாதீங்க!

சத்தான உளுந்தங்கஞ்சி ரெசிபி வெறும் 5 நிமிடத்தில் செய்யலாம்.

சத்தான உளுந்தங்கஞ்சி ரெசிபி வெறும் 5 நிமிடத்தில் செய்யலாம்.

author-image
WebDesk
New Update
Ulunthu

சத்து நிறைந்த ஆரோக்கியமான உளுந்தங்கஞ்சி ரெசிபி வீட்டில் எளிதாக செய்வது பற்றி பார்ப்போம்.

Advertisment

உளுந்து பருப்பு - 2கப்
பச்சரிசி- அரை கப்

ஏலக்காய்
சுக்குப் பொடி
நாட்டு சர்க்கரை
நெய் 

செய்முறை

Advertisment
Advertisements

அடுப்பில் கடாய் வைத்து வெறும் தோல் உளுந்து பருப்பு போட்டு வறுக்கவும். தோல் உளுந்து பருப்பில் சத்து அதிகம் உள்ளது. வறுத்த பின் உளுந்து பருப்பை ஒரு தட்டில் தனியாக வைக்கவும். அதே கடாயில்  அரை கப் பச்சரிசி போட்டு வறுக்கவும். அதே தட்டில் பச்சரியையும் போடவும். இதன் பின் ஆறவிட்டு மிக்ஸியில் போட்டு மைய அரைத்து எடுக்கவும். சல்லலடையில் போட்டு மாவை சலித்து எடுக்கலாம். அவ்வளவு தான் உளுந்தங்கஞ்சி செய்ய பொடி ரெடி. 

இப்போது ஒரு பாத்திரம் எடுத்து அதில் தேவையான அளவு உளுந்தங்கஞ்சி பொடி சேர்த்து தண்ணீர் ஊற்றவும். கட்டி இல்லாமல் கரைத்து இப்போது அடுப்பில் வைக்கவும். 3-4 நிமிடம் கொதிக்க விடவும். சற்று கெட்டியாக வந்ததும் கால் டீஸ்பூன் ஏலக்காய், சுக்குப் பொடி போட்டு அரை கப் பால் சேர்த்து கலக்கவும். அடுத்து தேவையான அளவு நாட்டு சர்க்கரை சேர்த்து 2 நிமிடம் கொதித்து வந்ததும் மணமான, சுவையான உளுந்தங்கஞ்சி ரெடி.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil
 

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: