சுகர், ஆயில் இல்லாம ஈசி ஸ்நாக்ஸ்: வீட்டுல இதை ட்ரை பண்ணுங்க!
உங்களுடைய வீடுகளில் இருக்கும் பொருட்களை வைத்தே இந்த ரெசிபியை நீங்கள் எளிதில் தயார் செய்துவிடலாம். இந்த ரெசிபி செய்ய வெறும் 15 நிமிடங்கள் போதும். இதனை தயார் செய்ய சுகர், ஆயில் என எதுவும் தேவையில்லை.
உங்களுடைய வீடுகளில் இருக்கும் பொருட்களை வைத்தே இந்த ரெசிபியை நீங்கள் எளிதில் தயார் செய்துவிடலாம். இந்த ரெசிபி செய்ய வெறும் 15 நிமிடங்கள் போதும். இதனை தயார் செய்ய சுகர், ஆயில் என எதுவும் தேவையில்லை.
சுகர், ஆயில் இல்லாத ஈசி ஸ்நாக்ஸ் எப்படி தயார் செய்யலாம் என்று இங்கு பார்க்கலாம்.
நம்முடை வீடுகளில் மாலையில் குழந்தைகளுக்கு என்ன ஸ்நாக்ஸ் செய்து கொடுப்பது என உட்கார்ந்து யோசித்துக் கொண்டே இருப்போம். குறிப்பாக எண்ணெய், சுகர் இல்லாமல் என்ன மாதிரியான ஸ்நாக்ஸ் செய்யலாம் என நாம் அவ்வப்போது இணையத்தில் தேடலாம். உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தவும், உங்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு பிடிக்கும் சூப்பரான மற்றும் டேஸ்டியான ரெசிபியை இங்கு பகிர்ந்துள்ளோம்.
Advertisment
உங்களுடைய வீடுகளில் இருக்கும் பொருட்களை வைத்தே இந்த ரெசிபியை நீங்கள் எளிதில் தயார் செய்துவிடலாம். இந்த ரெசிபி செய்ய வெறும் 15 நிமிடங்கள் போதும். அந்த வகையில் சுகர், ஆயில் இல்லாத ஈசி ஸ்நாக்ஸ் எப்படி தயார் செய்யலாம் என்று இங்கு பார்க்கலாம்.
முதலில் ஒரு மிக்சி எடுத்து அதில் வேர்க்கடலை, பொட்டுக்கடலை மற்றும் ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து அரைக்கவும். கொஞ்சம் நொறுநொறுப்பாக அரைத்துக் கொள்ளவும். இவற்றை தனியாக எடுத்து வைக்கவும்.
அடுத்ததாக ஒரு கடாய் எடுத்து அதில் ஒரு கப் வெள்ளம், 2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து வெள்ள கரைசல் தயார் செய்து கொள்ளவும். பாகு போல் அல்லாமல் தண்ணியாக செய்து கொள்ளவும்.
இப்போது ஒரு அடி கனமான கடாய் எடுத்து அதனை சூடேற்றவும். அதில் நெய் சேர்க்கவும். பிறகு, அவற்றில் ரவை சேர்த்து, அடுப்பை மீடியத்தில் வைத்து வறுக்கவும்.
இதன்பின்னர், அதில் தேங்காய் துருவல் சேர்த்து நன்கு வறுக்கவும். பிறகு அவற்றுடன் வேர்க்கடலை, பொட்டுக்கடலை பொடியை சேர்த்துக் கொள்ளவும். இவற்றை நன்கு கலந்த பிறகு, வெள்ள கரைசல் சேர்க்கவும். இவற்றை நன்கு கலந்து கொள்ளவும்
இப்போது அடுப்பை அணைத்து விட்டு, மாவை கெட்டியாக பிசைந்து கொள்ளவும். அவை ஓரளவுக்கு ஆறிய பிறகு, அவற்றை கையில் எடுத்து சிறிய உருண்டையாக பிடித்து வடை போன்று தட்டிக் கொள்ளவும்.
இப்படியாக எல்லா மாவையும் பிடித்து தட்டி, ஒரு இட்லி சட்டியில் வைக்கவும். இட்லிக்கு வேக வைப்பது போல் வைத்து 7 முதல் 8 நிமிடங்கள் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். இப்போது நீங்கள் எதிர்ப்பார்த்த சுகர், ஆயில் இல்லாத ஸ்நாக்ஸ் தயார். அவற்றை நீங்கள் ருசித்து மகிழலாம்.