ஒரு கப் அவல், 4 வாழைப்பழம் போதும்… குழந்தைகளுக்கு பிடித்த ஹெல்த்தி ஸ்வீட் ரெடி; சிம்பிள் ரெசிபி

இந்த கோடை விடுமுறையில் உங்கள் பிள்ளைகளுக்கு என்ன ஸ்வீட் செய்வது என்று தெரியவில்லையா அப்போ சம்மர் ஸ்பெஷலாக இந்த ஸ்வீட் செய்து கொடுங்கள்.

இந்த கோடை விடுமுறையில் உங்கள் பிள்ளைகளுக்கு என்ன ஸ்வீட் செய்வது என்று தெரியவில்லையா அப்போ சம்மர் ஸ்பெஷலாக இந்த ஸ்வீட் செய்து கொடுங்கள்.

author-image
WebDesk
New Update
ஸ்வீட் ரெசிபி

கோடை விடுமுறை விட்டாச்சு இனி பிள்ளைகள் எதாவது ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க சொல்லி கேட்க ஆரம்பித்து விடுவார்கள். தினமும் ஒரு ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. அதனால் இனி விதவிதமான ஸ்நாக்ஸ் செய்ய கற்றுக்கொள்ளுங்கள். 

Advertisment

அதுவும் பிள்ளைகளுக்கு ஹெல்தியாகவும் கடைகளில் கிடைப்பது போன்றும் செய்து கொடுக்க கற்றுக்கொள்ளுங்கள். கேக், முறுக்கு, ஜூஸ், பர்பி என பலவகையான் ஸ்நாக்ஸ் வகைகள் உள்ளது. அதை எல்லாம் செய்வதை விட பிள்ளைகளுக்கு பிடித்த மாதிரி செய்வது தான் டாஸ்க். 

அப்படியாக குழந்தைகளுக்கு பிடித்த அல்வா மாதிரி சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும் ஒரு ஸ்வீட் ரெசிபி எப்படி செய்வது என்று சூர்யா கிச்சன் யூடியூப் பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம். 

தேவையான பொருட்கள்

Advertisment
Advertisements

அவல்
நெய்
வாழைப்பழம்
நாட்டுச்சர்க்கரை

செய்முறை

ஒரு பவுலில் தேவையான அளவு அவல் எடுத்து தண்ணீர் ஊற்றி அலசி ஒரு ஐந்து நிமிடம் ஊற வைத்து எடுக்கவும்.
பின்னர் வாழைப்பழம் எடுத்து தோல் உரித்து நறுக்கி வைத்துக் கொள்ளவும். 

ஒரு மிக்ஸி ஜாரில் அவல், வாழைப்பழம் சேர்த்து அரைத்து அதை ஒரு பேனில் சேர்த்து நாட்டுச்சர்க்கரை  போட்டு கிளறவும். 

வெல்லமும் அவலும் ஒன்றாக சேர்ந்ததும் மேலே நெய் ஊற்றி கிளறி எடுத்தால் அல்வா மாதிரி பாத்திரத்தில் ஒட்டாமல் வரும். இதனை எடுத்து ஒரு பவுலில் வைத்து ஆற வைத்து நறுக்கி எடுத்தால் பர்பி மாதிரி சின்ன சின்ன துண்டுகளாக சாஃப்ட்டாக இருக்கும்.

இதை ப்ரிட்ஜியில் வைத்து ஒரு வாரம் வரை சாப்பிடலாம். 

Indian sweets that can be made easily at home Cooking Tips

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: