சுண்டைக்காய் சாப்பிடுபவர்களுக்கு பெருங்குடல் நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்று கூறப்படுகிறது. இது தவிர மலச் சிக்கல் பிரச்சனையையும் கட்டுப்படுத்தும் ஆற்றல் சுண்டைக்காய்க்கு இருக்கிறது என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். இவ்வளவு மருத்துவ குணங்கள் நிறைந்த சுண்டைக்காய் கொண்டு எவ்வாறு கூட்டு சமைக்கலாம் என்று காண்போம்.
தேவையான பொருட்கள்:
சுண்டைக்காய்,
எண்ணெய்,
கடுகு,
உளுத்தம் பருப்பு,
சீரகம்,
வெங்காயம்,
பூண்டு,
கறிவேப்பிலை,
தக்காளி,
உப்பு,
தேங்காய்,
தண்ணீர் மற்றும்
மஞ்சள் தூள்.
செய்முறை:
சுண்டைக்காயை சுத்தம் செய்துவிட்டு சிறிய துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இனி, அடுப்பில் ஓரு கடாய் வைத்து அதில் சிறிது எண்ணெய் சேர்க்கலாம். இத்துடன் கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.
இவை பொந்நிறமாக வதங்கிய பின்னர் நறுக்கிய தக்காளி, தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்க வேண்டும். இதன் பின்னர், சுண்டைக்காயை இவற்றுடன் சேர்க்கலாம். மேலும், இதில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கலக்க வேண்டும்.
இதன் பச்சை வாசனை நீங்கும் வரை வதக்கி, ஒரு கிளாஸ் தண்ணீர் சேர்க்க வேண்டும். இறுதியாக, சிறிது தேங்காய் துருவல் சேர்த்து இறக்கினால் சுவையான சுண்டைக்காய் கூட்டு தயாராகி விடும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.