உளுந்தவடை என்றாலே அனைவருக்கும் பிரியம். ஆனால் எண்ணெய் அதிகமாக இருக்குமே என்பதாலேயே அதனை சாப்பிட நாம் தயங்குவோம். அதே உளுந்தவடையை எண்ணெய் குடிக்காமல் மொறுமொறு வென்று புசுபுசுன்னு செய்ய ஒரு சின்ன டிப்ஸ் இருக்கு அதை செய்தாலே போதும் புசுபுசுன்னு சாஃப்டான உளுந்தவடையை செய்து விடலாம்.
தேவையான பொருட்கள்
வெங்காயம்
இஞ்சி
உப்பு
மிளகு
வறுத்த பச்சரிசி மாவு
கொஞ்சம் கூட எண்ணெய் குடிக்காம நல்ல புசுபுசுன்னு உளுந்தவடை எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம். உளுந்தவடை செய்வதற்கு ஒரு கப் அளவிற்கு உளுந்து எடுத்து பிசுபிசுப்பு தன்மை போகும் அளவிற்கு நன்றாக கழுவி ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
உளுந்து நல்லா ஊறிடுச்சான்னு தெரிஞ்சிக்க ஒரு உளுந்தை எடுத்து நசுக்கி பார்க்கவும். பின்னர் ஒரு 10 நிமிடம் ஃப்ரீசரில் வைத்து சில் பண்ணி எடுக்க வேண்டும். உளுந்து நன்றாக ஜில்லுன்னு மாறிய உடன் அரைத்து கொள்ளவும். உளுந்து கொரகொரப்பா அரைத்து பின்னர் அதனுடன் ஊரவைத்த தண்ணீரையே கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து அரைத்து கொள்ளவும்.
ஒரு ஐந்து நிமிடம் கையாலோ அல்லது விஸ்க் வைத்தோ மாவை நன்றாக கலந்து விட வேண்டும். இதில் தேவையான அளவு நறுக்கிய வெங்காயம், இஞ்சி, உப்பு, மிளகு வறுத்த பச்சரிசி மாவு சேர்த்து கலந்து எடுத்து கொள்ளவும்.
எந்த கப்பில் உளுந்து அளந்து எடுத்து கொண்டோமோ அதே கப்பில் முக்கால் கப்பிற்கு வருத்த பச்சரிசி மாவு சேர்க்க வேண்டும். உளுந்து மாவுக்கு சரியான அளவில் பச்சை அரிசி மாவு சேர்த்தால்தான் வடை எண்ணெய் குடிக்காமல் நல்ல சாஃப்டா இருக்கும்.
அரிசி மாவு அதிகமா சேர்த்துட்டோம் அப்படின்னாலும் வடை நல்ல ஹார்டா வந்துடும். அரிசி மாவு உடைய அளவு கம்மியா சேர்த்துட்டோம் அப்படின்னாலுமே வடை எண்ணெய் குடிக்க ஆரம்பித்துவ்டும். அதனால கரெக்டான அளவில் அரிசி மாவு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் நன்கு சூடான எண்ணெயில் உளுந்த வடை அளவிற்கு மாவை தட்டி எண்ணெயில் போட்டு இருபக்கமும் நன்றாக வேகவைத்து பொன்னிறமானவுடன் எடுத்து சாப்பிடலாம். முக்கியமாக வடையை மாற்றி மாற்றி திருப்பி போட்டு வேக வைக்க வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“