வல்லாரைகீரை மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. மேலும், பதட்டம் மற்றும் மன அழுத்தத்தைப் போக்க உதவுகிறது. சருமம் மற்றும் கூந்தல் வளர்ச்சிக்கும், வயிற்றுப் புண்களுக்கும் இது மிகவும் நல்லது. இந்தவல்லாரைகீரையைவைத்துஎப்படிசுவையானசாதம்எப்படிசெய்வதுஎன்றுஃபூடிஸ்ரூப்இன்ஸ்டாபக்கத்தில்கூறியிருப்பதுபற்றிபார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
வல்லாரைகீரை
Advertisment
Advertisements
பச்சை மிளகாய்
பூண்டு
சின்ன வெங்காயம்
கொத்தமல்லி
புளி
கல் உப்பு
கடலைப்பருப்பு
உளுத்தம் பருப்பு
தனியா
சமையல் எண்ணெய்
கடுகு
வரமிளகாய்
கறிவேப்பிலை
நிலக்கடலை
பொடியாக நறுக்கிய வெங்காயம்
வேகவைத்த சாதம்
செய்முறை:
இந்த சுவையான சாதம் தயாரிக்க சுமார் 15 நிமிடங்கள் ஆகும். முதலில், கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, தனியா ஆகியவற்றை நன்றாக வறுத்துக் கொள்ள வேண்டும். அதே வாணலியில், பச்சை மிளகாய், பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். கீரையின் பெயர் தெரிந்தால், கமெண்ட் செய்யுமாறு கேட்கப்பட்டுள்ளது.
கீரை நன்றாக வதங்கி சுருண்டதும், வாசனைக்காக சிறிதளவு கொத்தமல்லி, புளி, கல் உப்பு சேர்த்து மீண்டும் வதக்க வேண்டும். வதக்கிய கலவையை ஒரு மிக்ஸர் ஜாரில் போட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும். இறுதியாக, ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, வரமிளகாய், கறிவேப்பிலை, மொறுமொறுப்புக்காக நிலக்கடலை, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். வெங்காயம் வதங்கியதும், அரைத்து வைத்த விழுதைச் சேர்த்து வதக்கி, வேகவைத்த சாதத்துடன் கலந்து பரிமாறினால், சூப்பரான கீரை சாதம் தயார்.
வல்லாரை பொதுவாக நினைவாற்றலை அதிகரிக்கவும், மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தவும் பெயர் பெற்றது. இதில் உள்ள பிரம்மோசைடு, பிராமினோசைடு மற்றும் சென்டெல்லோசைடு போன்ற சேர்மங்கள் மூளையின் நரம்புகளைத் தூண்டி, நினைவாற்றல், கவனம் மற்றும் அறிவுத்திறனை மேம்படுத்த உதவுகின்றன. வளரும் குழந்தைகளுக்கு இது மிகவும் நல்லது.வல்லாரைக்கு இயற்கையாகவே மனதை அமைதிப்படுத்தும் மற்றும் பதட்டம், மன அழுத்தத்தைக் குறைக்கும் தன்மை உள்ளது. இது நரம்பு மண்டலத்தை சீராக்கி, மன அமைதியைத் தருகிறது.எனவேஇந்தசாதத்தைவாரம்இரண்டுமுறையாவதுபிள்ளைகளுக்குசெய்துகொடுங்கள்.