புதினா சாதம் செய்வது கடினம் என்று சிலர் நினைப்போம். ஆனால் அது அவ்வளவு கடினம் அல்ல. குக்கரில் ஈஸியாக சமைப்பது குறித்து இங்கு பார்ப்போம். குக்கரில் எல்லா பொருட்களையும் சேர்த்து கலந்து இரண்டு விசில் வந்தால் சுவையான ஹெல்தியான புதினா சாதம் ரெடி.
தேவையான பொருட்கள்
அரிசி -1 கப்
உரித்த பூண்டு பல் – 8
இஞ்சி துண்டுகள் – 2
பச்சை மிளகாய் – 4
புதினா இலைகள் – 2 கட்டு
அன்னாசி பூ – 1
லவங்கம் – 2
உளுந்து – 1 ஸ்பூன்
கடலைப்பருப்பு
வேர்கடலை – 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் 1 கப் அளவு அரிசியை எடுத்து தண்ணீரில் போட்டு கழுவி 10 லிருந்து 15 நிமிடங்கள் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். புழுங்கல் அரிசி, பச்சரிசி, பாஸ்மதி அரிசி என எதுவாக இருந்தாலும் சரி தண்ணீர் ஊற்றும் போது மட்டும் அதற்கான அளவை மாற்றிக் கொள்ள வேண்டும்.
அடுத்து மிக்ஸியில் பூண்டு, இஞ்சி துண்டுகள், பச்சை மிளகாய், புதினா, கொஞ்சம் புளி எல்லாம் சேர்ந்து 1/4 கப் மட்டும் தண்ணீர் ஊற்றி அரைத்து கொள்ளுங்கள். நிறைய தண்ணீர் ஊற்றி வேண்டாம். பின், அடுப்பில் குக்கர் வைத்து நல்லெண்ணெய் அல்லது கடலை எண்ணெய் சேர்த்து, பட்டை, அன்னாசி பூ, லவங்கம், உளுந்து , கடலைப்பருப்பு, வேர்கடலை, முந்திரிப் பருப்பு
எல்லாம் சேர்த்து நன்றாக பொன் நிறமாக வதக்கவும். பெருங்காயத்தூள் மற்றும் மிக்ஸியில் அரைத்து வைத்திருக்கும் புதினாவை சேர்த்து மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரில் போடவும். எல்லாவற்றையும் நன்கு வதக்கவும்.
புதினா பச்சையாக இருப்பதால், நன்கு வதக்க வேண்டும். பின்பு 2 கப் அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைத்து, பின்பு ஊற வைத்த அரிசியை போட்டு குக்கரை மூடி வைக்கவும்.2 விசில் விட்டு எடுத்தால் சுவையான புதினா சாதம் ரெடி. முந்திரி, வேர்கடலை எல்லாம் சேர்த்து இருப்பதால் தயிர் தேவையில்லை. வேண்டுமானால் தயிர் சேர்த்து சாப்பிடலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“