சூடு உடம்பு இருக்கா? இந்த உணவுக்கு கட்டாயம் 'நோ' சொல்லுங்க: மருத்துவர் சிவராமன்

சூட்டு உடம்பு காரங்க எந்த மாதிரியான உணவுகளை எடுக்க வேண்டும் எந்த மாதிரியான உணவுகளை தவிர்க்க வேண்டும் என டாக்டர் சிவராமன் கூறுகிறார்.

சூட்டு உடம்பு காரங்க எந்த மாதிரியான உணவுகளை எடுக்க வேண்டும் எந்த மாதிரியான உணவுகளை தவிர்க்க வேண்டும் என டாக்டர் சிவராமன் கூறுகிறார்.

author-image
WebDesk
New Update
சூட்டு உடம்பு

உடல் சூடு என்பது அனைவருக்குமே ஏற்படுவதுதான். வெப்பமான காலநிலை, அதிகப்படியான உடல் உழைப்பு அதுமட்டுமின்றி சிலர் உடல் வாகு கூட உடல் சூட்டை அதிகரிக்கச் செய்யலாம்.

Advertisment

இதனால் சருமம் சிவந்து போதல், தலைவலி, தாகம், சோர்வு போன்ற அறிகுறிகள் ஏற்படும். உடல் சூட்டைத் தணிப்பது நம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியம். எனவே அவற்றை எப்படி தடுக்கலாம் என்று டாக்டர் சிவராமன் கூறுகிறார். 

உடல் சூட்டை தவிர்ப்பதற்கான வழிகள்: 

டிப்ஸ் 1: சரியான நேரத்தில் சாப்பிட வேண்டும். நல்ல ஆரோக்கியமான உணவுகளை எடுக்க வேண்டும். 
டிப்ஸ் 2: கொள்ளு, கோழிக்கறி சாப்பிட கூடாது. 
டிப்ஸ் 3: எண்ணெய் பலகாரம் தவிர்க்க வேண்டும். 
டிப்ஸ் 4: இரவு கண்விழிக்க கூடாது. 10 மணிக்குள் உறங்க வேண்டும்.
டிப்ஸ் 5: பதட்டம், மன கவலை இருக்க கூடாது.
டிப்ஸ் 6: வெயில் என்பதால் ஐஸ் போட்டு அதிகப்படியான பானம் குடிக்க கூடாது  

Advertisment
Advertisements

நீர்ச்சத்து அதிகம் நிறைந்த உணவுகளான தர்பூசணி, வெள்ளரி, ஆப்பிள், கொய்யா, நெல்லிக்காய் போன்ற பழங்களை அதிகமாக சாப்பிட வேண்டும்.   உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க தண்ணீர், புதினா, நீர், நெல்லிக்காய் சாறு, கற்றாழை சாறு போன்றவற்றையும் குடிக்கலாம். 

காற்றோட்டம் அதிகமாக இருக்கும் இடத்தில் இருப்பது உடல் வெப்பத்தைக் குறைக்க உதவும் என டாக்டர் கூறுகிறார். குளிர்ந்த நீரில் குளிப்பது உடல் வெப்பத்தைக் குறைக்க உதவும்.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

heat Avoid these foods for a healthy summer

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: