தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் உள் மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக உள்ளது. தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.
இந்நிலையில், 3 மாவட்டங்களில் நாளை மிக கனமழைக்கும், 9 மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது. இதன்படி கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் நாளை மிக கனமழைக்கும், கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, விருதுநகரில் கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை, மறுநாள் கோவை, நீலகிரியில் மிக கனமழைக்கும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, தருமபுரி, கிருஷண்கிரி, சேலம், நாமக்கலில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது. வரும் 20ம் தேதி முதல் 23ம் தேதி வரை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“