கோவிட்டுகுப் பிறகு சிறு காய்ச்சல் என்றாலும் பலருக்கும் அச்சம் வந்துவிடுகிறது. சாதாரண வைரஸ் காய்ச்சல் என்றாலும் கவலைப்படுகிறார்கள். ஆனால், உங்கள் வீட்டில் 100 இந்த பொடியை வைத்துக்கொள்ளுஞ்கள். தினமும் இந்த பொடிகளை தேநீராகக் குடித்து வந்தால் வைரஸ் காய்ச்சல் கவலையே இல்லை என்று மருத்துவர் சிவராமன் கூறுகிறார்.
மனிதர்களின் வாழ்க்கை முறை, உணவுமுறை, உணவு உற்பத்தி முறை, காலநிலை என பலவும் மாறிவிட்டதால், மனிதர்கள் நோய் எதிர்ப்பு சக்தி குறைவால் பல நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள். கோவிட்டுக்கு பிறகு, பலரும் சிறு காய்ச்சல் ஜலதோஷம் என்றாலும் ஏதாவது வைரஸ் காய்ச்சலாக இருக்குமோ என்று பயப்படுகிறார்கள்.
ஆனால், மனிதர்களுக்குள்ளேயே இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறது. நமது பாரம்பரிய உணவு மூலிகளை தேநீர் போல தினமும் குடித்து வந்தால் பல நோய்களில் இருந்து தப்பிக்கலாம் என்று மருத்துவர் சிவராமன் கூறுகிறார்.
தேநீரில் பால் கலந்து குடிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர் சிவராமன் கூறுகிறார். பால் கலக்காமல் சர்க்கரை போடாமல், வெறும் தேயிலை தேநீரைக் குடிப்பது ரொம்ப நல்லது என்கிறார்.
அதே போல, சித்த மருத்துவத்தில் தேகராஜன் என்று குறிப்பிடப்படும் கரிசாலை பொடியை தேநீராகக் குடிக்கும்போது, வைரஸ் காய்ச்சல் வராமல் தடுக்கும், கபத்தை முறிக்கும் என்கிறார்.
அதே போல, நெல்லிக்காய் பொடி, சுக்குப் பொடி, ஆவாரைப் பொடி, புதினா போன்றவற்றை தேநீராகக் குடிக்கும்போது, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். வைரஸ் நோய்கள் பற்றி கவலை இல்லை என்று மருத்துவர் சிவராமன் கூறுகிறார்.