கற்பூரவல்லியை தினசரி சாப்பிடுவதன் மூலம் ஏற்படும் 10 பயன்களை பார்க்கலாம். சளி, இருமல் மட்டும் இல்லாமல் தாய்ப்பால் சுரப்புக்கும் மற்றும் உடலில் ஏற்படும் மற்ற சில பிரச்சனைகளை குணப்படுத்தும் இந்த கற்பூரவல்லியை வீட்டில் வளர்ப்பது நன்மை பயக்கும்.
ஜீரண மண்டல பிரச்சனை: காலை உணவு முடிந்த பிறகு ஒரு சிட்டிகை ஓமம், சீரகம் கலந்து சாப்பிட்டால் ஜீரனமின்மை, பசி, வயிறு உப்புதல் போன்ற பிரச்சனைகளை குணமாக்கும்.
சிறுநீரக கோளாறு: காலை வெறும் வயிற்றில் கற்பூரவல்லியை முன்று எச்சிலுடன் சேர்த்து முழுங்கும்போது சிறுநீரக கல் பிரச்சனை நீங்கும். மேலும் மலச்சிக்கலை போக்கும்.
தாய்ப்பால் அதிகரிக்கும்: இன்றைய சூழலில் குழந்தை பேறுக்கு பிறகு பால் சுரப்பு இல்லை என்று கவலை கொள்பவர்கள். இதை சாப்பிடலாம். தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.
வறட்டு இருமல்: 4 கற்பூரவல்லி இலைகளை எடுத்து தீயில் லேசாக வாட்டி சாறு பிளிந்து தேன் கலந்து காலை வெறும் வயிற்றில் 48 நாட்கள் சாப்பிட்டு வர வறட்டு இருமல் நீங்கும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் தேன் சேர்க்க வேண்டாம்.
சோம்பேறித்தனம்: காலையில் சுறுசுறுப்பாக இருப்பதற்கு இந்த கற்பூரவல்லி உதவும். இதை மென்றும் சாப்பிடலாம், சாறு எடுத்தும் சாப்பிடலாம்.
தோல் பிரச்சனை: நமது உடலின் தோலில் சில நுண்கிருமி தொற்றால் படை, சொறி, அரிப்பு போன்றவை ஏற்படுகின்றன. கற்பூரவள்ளி இலைகளை சிறிது பறித்து, நன்கு கசக்கி அந்த இலைகளின் துளிகளை பாதிக்கப்பட்ட தோல் பகுதிகளில் விட்டு வந்தால் விரைவில் குணமாகும்.
செலவில்லாத கற்பூரவள்ளி செடி 10 மருத்துவம் | 10 health benefits of karpooravalli
இரத்த அழுத்தம்: கற்பூரவள்ளி இலையிலுள்ள நார்ச்சத்து இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை கட்டுப்பாட்டுக்குள் வைப்பதற்கு உதவும். தினமும் கற்பூரவள்ளி இலையினை சாப்பிட்டு வந்தால் நம்முடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கவும் உதவும்.
தலை முடி முதல் பருக்கள் வரை: தலையில் காணப்படும் நரை முடியினை கருப்பாக மாற்றுவதற்கு கற்பூரவள்ளி இலையில் இருந்து கிடைக்கக்கூடிய பேஸ்ட் பயன்படுத்தப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் முகத்தில் காணப்படும் பருக்களை நீக்கவும் மற்றும் பொலிவு இழந்து காணப்படும் முகத்தினை பொலிவு பெற செய்யவும் கற்பூரவள்ளி இலை பயன்படுகிறது.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.