பைன் நட்ஸ் பற்றி தெரியுமா? வலுவான எலும்பு முதல் ஆரோக்கியமான மூளையின் செயல்பாடு வரை முக்கிய நன்மைகள் இருக்கு

பைன் நட்ஸ்-ல் அதிக சத்துக்கள் இருக்கிறது. குறிப்பாக மோனோசாச்சுரேடட் மற்றும் பாலிசாச்சுரேடட் கொழுப்பு சத்து உள்ளது, இதனால் இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

பைன் நட்ஸ்-ல் அதிக சத்துக்கள் இருக்கிறது. குறிப்பாக மோனோசாச்சுரேடட் மற்றும் பாலிசாச்சுரேடட் கொழுப்பு சத்து உள்ளது, இதனால் இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
பைன் நட்ஸ்

பைன் நட்ஸ்

பைன் நட்ஸ்-ல் அதிக சத்துக்கள் இருக்கிறது. குறிப்பாக மோனோசாச்சுரேடட் மற்றும் பாலிசாச்சுரேடட் கொழுப்பு சத்து உள்ளது, இதனால் இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

Advertisment

100 கிராம் பைன் நட்ஸ்-ல் இருக்கும் சத்துக்களை தெரிந்துகொள்வோம்.

கலோரிகள்:191

மொத்த கொழுப்பு சத்து: 19 கிராம்

Advertisment
Advertisements

சாச்சுரேடட் கொழுப்பு சத்து: 1.5 கிராம்

மோனோசாச்சுரேடட் கொழுப்பு சத்து: 10.7 கிராம்

பாலிசாச்சுரேடட் கொழுப்பு சத்து: 4. 9 கிராம்

கார்போஹைட்ரேட்: 3.7 கிராம்

நார்சத்து: 1 கிராம்

சர்க்கரை : 1 கிராம்

புரத சத்து, வைட்டமின் இ, வைட்டமின் கே, மெக்னீஷியம், பாஸ்பரஸ், சிங், காப்பர் உள்ளது.

பைன் நட்ஸ்-ல் மெக்னீஷியம் இருப்பதால், இவை உடலின் பல்வேறு செயல்களுக்கு உதவியாக இருக்கிறது. இந்நிலையில் கால்சியத்தை உடல் ஏற்றுக்கொள்ள வைக்கிறது.  இதனால் எலும்பு ஆரோக்கியமாக இருக்கும். ரத்த அழுத்தத்தை சீராக வைத்துக்கொள்கிறது. மேலும் சதைகள் சுருங்கி, விரிய மற்றும் ஓய்வாக உணர உதவுகிறது. இதனால் பைன் நட்ஸ் சாப்பிட்டால், எலும்பு வலுவாகும், அதிக ரத்த அழுத்தம் குறையும். மேலும் சதைகளின் ஆரோக்கியத்திற்கு உதவும்.

இதில் இருக்கும் புரத சத்து, தசைகளை சரிப்படுத்திக்கொள்ளவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், என்சைம் மற்றும் ஹார்மோன்கள் சுரப்பதற்கு உதவுகிறது.

இதில் அதிக ஆண்டி ஆக்ஸிடண்ட் உள்ளது. குறிப்பாக வைட்டமின் இ பல்வேறு விஷயங்களை செய்ய உதவுகிறது. செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்கிறது. மோசமான நோயான புற்றுநோய், இதய நோய்யை கூட தடுக்க முடியும் என்று கூறப்படுகிறது.

இதில் உள்ள மோனோசாச்சுரேடட் கொழுப்பு சத்து, ஆண்டி ஆக்ஸிடண்ட் உள்ளிட்டவை மூளையின் சிந்தித்துச் செயல்படும் ஆற்றல் அதிகரிக்கிறது. இந்நிலையில் ரத்த குழாய்களின் ஆரோக்கியத்தை காப்பாதல், மூளைக்கு சரியாக ரத்தம் சென்றடையும். இதனால் நமது நினைவுகளின் ஆற்றலை அதிகரிக்கிறது, ஒட்டுமொத்தமாக சிந்தனை அடிப்படையில் நன்றாக பணியற்ற உதவுகிறது.

கார்போஹைட்ரேட் ரத்ததில் வேகமாக கலக்காமல் மெதுவாக கலக்க உதவுகிறது. இதனால் ரத்த சர்க்கரை கட்டுபாட்டில் இருக்கும். மேலும் உடல் இன்சுலின் செயல்பாடுகளை ஏற்றுக்கொள்ளச் செய்கிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: