பீட்ரூடில் நார்சத்து மற்றும் மினரல்ஸ் உள்ளது. பீட்ரூட்டின் சிவப்பு நிறத்திற்கு பிட்டலயின்ஸ் என்ற ஆன்டி ஆக்ஸிடண்ட்தான் காரணம். இவை பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.
பீட்ரூட்டின் இலைகளையும் நாம் சாப்பிடலாம். அதில் வைட்டமின் ஏ மற்றும் கே மற்றும் பல்வேறு மினரல்ஸ் உள்ளது. இந்நிலையில் 100 கிராம் பீட்ரூட்டில் உள்ள சத்துக்கள் நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.
கலோரிகள்: 43, கார்போஹைட்ரேட்: 10 கிராம், புரத சத்து: 0.2 கிராம், வைட்டமின் சி, போலேட், நார்சத்து: 2 கிராம் உள்ளது. மேலும் இதில் பொட்டாஷியம், இரும்பு சத்து, நைட்ரேட் உள்ளது.
இந்நிலையில் இதில் நார்சத்து உள்ளதால், ஜீரணமாக உதவும். உடல் எடை குறைய உதவும். இதில் உள்ள பிட்டலயின்ஸ், சக்திவாய்ந்த ஆன்டி ஆக்ஸிடண்ட் வீக்கத்தை குறைக்கும். இதய நோய் மற்றும் சில வகை புற்றுநோய் தாக்காமல் பார்த்துக்கொள்ளும்.
இதில் உள்ள நைட்ரேட்ஸ், ரத்த அழுத்தத்தை சீராக்கும். இதனால் ரத்த ஓட்டம் நன்றாகும். இது உடல்பயிற்சி செய்யும்போது மேலும் உதவியாக இருக்கும்.
இதில் உள்ள வைட்டமின் சி, பொட்டாஷியம், இரும்பு சத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மேலும் ஒட்டு மொத்தமாக உடலுக்கு சக்தி கொடுக்கும். ரத்த சிவப்பு அணுக்களின் உற்பத்தி அதிகமாகும்.
சர்க்கரை நோயாளிகள், இதை அளவாக எடுத்துக்கொள்ள வேண்டும். இதன் கிளைசிமிக் இண்டக்ஸ் மிதமான அளவில் உள்ளது. மேலும் கார்போஹைட்ரேட் சத்தும் உள்ளதால், இது ரத்த சர்க்கரையை அதிகப்படுத்தலாம். எனவே ஒட்டுமொத்தமாக கார்போஹைட்ரேட் அளவை நாம் சரி பார்த்துக்கொள்ள வேண்டும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil