கத்திரிக்காயில் முக்கிய சத்துக்களும் நார்சத்தும் உள்ளன. இது செரிமாண மண்டல ஆரோக்கியத்திற்கு நல்லது. உடல் எடை குறைய உதவும்.
100 கிராம் கத்திரிக்காயில் என்ன சத்துக்கள் இருக்கிறது என்பதை தெரிந்துகொள்வோம்.
கலோரிகள்: 24
கொழுப்பு சத்து: 0.3 கிராம்
கார்போஹைட்ரேட்: 4 கிராம்
நார்சத்து: 1.3 கிராம்
புரத சத்து: 1.4 கிராம்
வைட்டமின் சி: 12 மில்லிகிராம்
வைட்டமின் கே : 3.5 மைக்கிரோகிராம்
போலேட்: 34 மைக்கிரோகிராம்
மெக்னீஷியம்: 15 மில்லிகிராம்
பொட்டாஷியம் : 200 மில்லிகிராம்
கத்திரிக்காயில் ஆண்டி ஆக்ஸிடண்ட் உள்ளது. குறிப்பாக நஸ்யுனின் உள்ளது. இவை செல்களின் சேதத்தை குறைத்து, வீக்கத்தை குறைக்கிறது.
இதய ஆரோக்கியம்: நார்சத்து, பொட்டாஷியம், ஆண்டி ஆக்ஸிடண்ட் உள்ளிட்டவை இதயம் ஆரோக்கியமாக இருப்பதற்கு உதவுகிறது. ரத்த அழுத்தத்தை குறைத்து, இதய ரத்த குழாய்களை பாதிக்கும் நோய் ஏற்படாமல் தடுக்கிறது.
இதில் குறைந்த கலோரி மற்றும் அதிக நார்சத்து உள்ளது. இதனால் அதிகம் சாப்பிட்டதுபோல உணர்வு ஏற்படும். அதிக உணவுகளை நாம் எடுத்துக்கொள்ள மாட்டோம். இதனால் உடல் எடை குறையும்.
இதில் உள்ள நார்சத்து ஜீரணிக்க உதவும் மேலும் மலச்சிக்கலை தடுக்கும். இதில் குறைந்த கிளைசிமிக் இண்டக்ஸ் உள்ளதால், ரத்த சர்க்கரையில் குறைந்த தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால் நாம் எண்ணெய்யில் பொறித்து சாப்பிட்டால், அதிக கலோரிகளாக மாறும். குறைந்த எண்ணெய்யில்தான் சமைத்து சாப்பிட வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”