நம்மில் பலர் பச்சை மிளகாய்யை கூட உணவில் சேர்த்துகொள்வோம். இந்நிலையில் நாம் குடைமிளகாய்யை மட்டுமே சில உணவுகளுக்கு மட்டுமே பயன்படுத்துகிறோம்.
குறிப்பாக சான்விஜ், நூடுல்ஸ் போன்ற உணவுகளில் மட்டுமே பயன்படுத்துகிறோம். இந்நிலையில் நாம் குடைமிளகாயில் உள்ள சத்துகளை தெரிந்துகொள்ள வேண்டும். இந்நிலையில் இதில் வைட்டமின்ஸ், ஆண்டி ஆக்ஸிடண்ட் உள்ளது. இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இந்நிலையில் இதை நன்றாக சுத்தப்படுத்தி உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.
100 கிராம் குடைமிளகாயில் என்ன சத்துக்கள் உள்ளது என்பதை தெரிந்துகொள்வோம்.
கலோரிகள்: 20 , கார்போஹைட்ரேட்: 4.6 கிராம், நார்சத்து: 1.7 கிராம், புரத சத்து: 0.9 கிராம், கொழுப்பு சத்து: 0.2 கிராம், வைட்டமின் சி, வைட்டமின் ஏ, வைட்டமின் கே உள்ளது.
பொட்டாஷியம், மெக்னீஷியம், மினரல்ஸ், கரொடிநாய்ட்ஸ், பிளாபாய்ட்ஸ் உள்ளது.
இதில் உள்ள அதிக வைட்டமின் சி ஆண்டி ஆக்ஸிடண்டாக செயல்பட்டு, உடலை பாதிப்பிலிருந்து மீட்கும். மோசமான நோயிலிருந்து நம்மை காக்கும்.
வைட்டமின் சி, நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். உடலை மோசமான தொற்று நோய்களில் இருந்து பாதுகாக்கும்.
குடைமிளகாய் குறைந்த கலோரிகளை கொண்டது. அதில் உள்ள நார்சத்து நமக்கு அதிகம் சாப்பிட்டதுபோல உணர்வை கொடுக்கும். இதில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் கரொடிநாய்ட்ஸ் கண் ஆரோக்கியத்திற்கு உதவியாக இருக்கும். வயதாவதால் ஏற்படும் கண் தொடர்பான சிக்கல் குறையும்.
வீக்கத்திற்கு எதிரான குணங்கள் கொண்டது. இந்நிலையில் குறைந்த கலோரிகள் இருப்பதால் சுகர் பேஷண்ட்ஸ் இதை எடுத்துக்கொள்ளலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“