குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் விருப்பப்பட்யலில் இருப்பது கேரட் என்ற காய்கறியாகத்தான் இருக்கும். இந்நிலையில் கேரட்டில் மாக்ரோ மற்றும் மைக்ரோ சத்துக்கள் உள்ளது.
இந்நிலையில் அரை கப் கேரட் உடலுக்கு தேவையான வைட்டமின்ஸ், மினரல்ஸை உடலுக்கு தருகிறது. இந்நிலையில் 100 கிராம் கேரட்டில் இருக்கும் சத்துக்களை தெரிந்துகொள்வோம்.
கலோரிகள்: 33.22
கார்போஹைட்ரேட்: 5.55 கிராம்
புரத சத்து: 0.95 கிராம்
கொழுப்பு சத்து: 0.47 கிராம்
நார்சத்து: 4.18 கிராம்
சோடியம்: 52.33 மில்லி கிராம்
பொட்டாஷியம்: 273 மில்லி கிராம்
வைட்டமின் ஏ, வைட்டமின் கே, வைட்டமின் சி, கால்சியம், இரும்பு சத்து உள்ளது.
கேரட்டில் இருக்கும் சிவப்பு நிறம் மற்றும் கெரோடிநாய்ட்ஸ் மற்றும் ஆண்டி ஆக்ஸிடண்ட் உள்ளது. பிளாபோநாய்ட்ஸ் மற்றும் பினோலிக் வழித்தோன்றல்களில் ஆண்டி ஆக்ஸிடண்ட் உள்ளது.
இதில் இருக்கும் வைட்டமின் ஏ சத்து டி.என்.ஏ-வை பாதுகாத்து புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது. இதில் உள்ள பீட்டாகெரோட்டினி மற்றும் கெரோட்டிநாட்ஸ் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். நுரையீரல், மார்பகம் மற்றும் புரோஸ்டேட் புற்று நோய்யை தடுக்கிறது.
இது கண்பார்வையை பாதுகாக்கிறது. வைட்டமின் ஏ மற்றும் கரோடிநாட்ஸ் லுடியின் மற்றும் சியான்தினின். இவை ரெட்டினாவிற்கு சென்று, வயதாவதை முன்னிட்டு ஏற்படும் சேதங்களை குறைக்கிறது. வைட்டமின் ஏ குறைபாடு கண்பார்வையை ஏற்படுத்தும்.
100 கிராம் கேரட்டில் 4.18 கிராம் நார்சத்து இருக்கிறது. அதிக நார்சத்து சாப்பிட்டால் மலச்சிக்கல் மற்றும் ஜீரண பிரச்சனை ஏற்படாது.
சர்க்கரை நோயாளிகள் கேரட்டை எடுத்துக்கொள்ளும்போது, அளவு முக்கியம். ஒரு கப் கேரட்டில் 15 கிராம் கார்போஹைட்ரேட் இருக்கிறது. இதனால் பார்த்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“