உடல் எடை குறைய வேண்டுமா? பீன்ஸ் ரொம்ப முக்கியம்: சுகர் பேஷண்ட்ஸ், கர்ப்பிணி பெண்கள் இதை நோட் பண்ணுங்க

நாம் சாதாரணமாக நினைக்கும் பீன்ஸில் அதிக சத்துக்கள் இருக்கிறது. இதில் ஆண்டி ஆக்ஸிடண்ட் உள்ளது. இந்நிலையில் 100 கிராம் பீன்ஸில் உள்ள சத்துக்களை பற்றி தெரிந்துகொள்வோம்.

நாம் சாதாரணமாக நினைக்கும் பீன்ஸில் அதிக சத்துக்கள் இருக்கிறது. இதில் ஆண்டி ஆக்ஸிடண்ட் உள்ளது. இந்நிலையில் 100 கிராம் பீன்ஸில் உள்ள சத்துக்களை பற்றி தெரிந்துகொள்வோம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
பீன்ஸ்

பீன்ஸ்

நாம் சாதாரணமாக நினைக்கும் பீன்ஸில் அதிக சத்துக்கள் இருக்கிறது. இதில் ஆண்டி ஆக்ஸிடண்ட் உள்ளது. இந்நிலையில் 100 கிராம் பீன்ஸில் உள்ள சத்துக்களை பற்றி தெரிந்துகொள்வோம்.

Advertisment

கலோரிகள் : 31, புரத சத்து: 1.83 கிராம், கொழுப்பு சத்து: 0.22கிராம், கார்போஹைட்ரேட்: 7.13 கிராம், வைட்டமின் சி:12.2 மில்லி கிராம், போலேட், வைட்டமின் கே, கால்சியம், இரும்பு சத்து, மெக்னீஷியம், பொட்டாஷியம் உள்ளிட்டவை உள்ளன.

இதில் உள்ள நார்சத்து நமது வயிற்றின் செயல்பாடுகளை ஆரோக்கியமாக கவனித்துக்கொள்கிறது. இதில் ஆண்டி ஆக்ஸிடண்ட் அதிகமாக உள்ளது. வைட்டமின் சி-யில் உள்ள ஆண்டி ஆக்ஸிடண்ட் ரத்தம் உறைய உதவுகிறது.

இதில் குறைந்த கலோரிகள் உள்ளதால் உடல் எடை குறைய உதவும். நார்சத்து மற்றும் போலேட் இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.

Advertisment
Advertisements

இதில் குறைந்த கிளைசிமிக் இண்ட்ஸ் உள்ளது. இதனால் ரத்த சர்க்கரை அதிகமாக அதிகரிக்காது. இதனால் சுகர் பேஷண்ட்ஸ் இதை கவலை இல்லாமல் சாப்பிடலாம்.

பிறக்கும் குழந்தைகளிடம் காணப்படும் மூளை மற்றும் தண்டுவடம் குறைபாட்டை, பீன்ஸில் உள்ள போலேட் குறைக்க உதவும் என்று கூறப்படுகிறது. இதில் உள்ள இரும்பு சத்து கர்ப்பிணிகளுக்கு ரத்த சோகை ஏற்படாமல் தடுக்கும்.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: