ஸ்டார் பழங்களை நாம் சாதாரண நாட்களில் பார்க்க மாட்டோம். பொதுவாக குறைப்பிட்ட காலங்களில் கிடைக்கும். மேலும் நாம் சுற்றிப் பார்க்க செல்லும் சில இடங்களில் இது கிடைக்கும்.
இந்நிலையில் 100 கிராம் ஸ்டார் பழங்களில் உள்ள சத்துக்களை தெரிந்துகொள்வோம் .
கலோரிகள் : 31, கார்போஹைட்ரேட்: 6.73 கிராம், புரத சத்து: 1.04 கிராம், கொழுப்பு சத்து: 0.33 கிராம், நார்சத்து: 2. 8 கிராம், வைட்டமின் சி : 34.4 மில்லிகிராம், பொட்டாஷியம்: 133 மில்லிகிராம், போலேட், மெக்னீஷியம்: 10 மில்லிகிராம்
இதில் அதிக ஆண்டி ஆக்ஸிடண்ட் உள்ளது. வைட்டமின் சி அதிகம் உள்ளது. இந்த ஆண்டி ஆக்ஸிடண்ட் நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இந்நிலையில் மழை பெய்யும் காலத்தில் நமக்கு எளிதாக தொற்று நோய் ஏற்படலாம். இந்நிலையில் இதிலிருந்து நம்மை காப்பாற்ற உதவும். மேலும் இதில் உள்ள நார்சத்து ஜீரணிக்க உதவுகிறது. இதில் குறைந்த கலோரிகள் இருப்பதால் உடல் எடை குறைய உதவும்.
இதில் அதிக சுகர் இல்லாமல் இருப்பதால் சர்க்கரை நோயாளிகள் எடுத்துக்கொள்ளலாம். சிறுநீரக பிரச்சனை இருப்பவர்கள் இதை தவிர்க்க வேண்டும்.
குறிப்பாக இதில் ஆக்ஸாலிக் ஆசிட் உள்ளது. இதன்காரணமாக இதை சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ளக்கூடாது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“